பெரும் சர்ச்சையாகி சினிமாவை உலுக்கிய 5 விவாகரத்துகள்.. விஜய்யின் வாழ்க்கையில் விளையாடிய அமலா பால்

5 divorces that rocked the cinema and became a big controversy: “கடந்து போவது காதல் மட்டும் அல்ல! கல்யாணமும் தான்!” என்பது போல் கலைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலரின் திருமண வாழ்வும் அவரது விவாகரத்துகளும் உள்ளது.  சோகங்கள் பலவற்றையும் மறைத்து சிரித்து வாழும் அவர்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பெரும் சர்ச்சைக்குள்ளான திரைத்துறை சார்ந்தவர்களின் விவாகரத்து இதோ,

யுவன் சங்கர் ராஜா: இளையராஜாவின் மகனான யுவன், 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்ற பெண்ணையும், 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணையும் காதலித்து கரம் பிடித்தார். சோக கீதங்களை, தன் குரலால் மெருகேற்றிவிடும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு, முதல் இரண்டு திருமணங்கள் தோல்வி அடைந்த நிலையில் ஜஃப்ரூன் நிஷா என்பவரை  மூன்றாவதாக திருமணம் செய்து உள்ளார்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி: பள்ளி பருவத்திலிருந்து காதலித்து கரம் பிடித்த தனது தோழி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்தார் ஜிவி பிரகாஷ். இவர்களின் விவாகரத்திற்கு பல வகையான காரணங்கள் சொல்லப்பட்ட போதும், எங்கள் விவாகரத்திற்கு வேறு யாரும் காரணம் அல்ல.

நாங்கள் யோசித்து தான் முடிவு எடுத்து இருக்கிறோம் என்று சைந்தவி கூறியுள்ளார். திறமையான இசையமைப்பாளராக, வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஜிவி பிரகாஷின் விவாகரத்து திரையுலகினரை தாண்டி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தனது விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இழுத்துவிட்ட இமான்  

இமான் மற்றும் மோனிகா: கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 12 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு மனைவி மோனிகாவுடன் விவாகரத்து பெற்றார் இமான். இவர்களின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயனை காரணமாக கூறி பொதுவெளியில் பரபரப்பை கிளப்பினார் இசையமைப்பாளர் இமான்.

பாலா – அம்ருதா சுரேஷ்: சிறுத்தை சிவாவின் சகோதரரான பாலா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் வீரம், தம்பி படங்களில் நடித்திருந்த பாலா, பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து 12 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து  பெற்றார். மேலும் இரண்டாவதாக மருத்துவர் எலிசபத் என்பவரை திருமணம் செய்து இருந்த பாலா கல்யாணமாகி ஒரு வருடம்  நிறைவடைந்த நிலையில்  அவரையும் விவாகரத்து செய்தார்.

அமலாபால்-ஏ எல் விஜய்: தளபதியின் தலைவா படத்தின் போது அமலாபால் மற்றும் ஏ எல் விஜய் இருவரும் காதலில் விழுந்து கல்யாணம் செய்து கொண்டனர். நம்பிக்கையும் நேர்மையும் உடைந்து விட்ட பிறகு திருமண வாழ்க்கை தொடர்வதில் அர்த்தமில்லை என்று அதிரடியாக அறிவித்தார் விஜய். 

கருத்து வேறுபாடு காரணமாகவும், அமலா பாலின் தவறான பழக்க வழக்கங்கள் காரணமாகவும் விவாகரத்து  பெற்று பிரிந்து, இருவரும் வேறு ஒரு  மணவாழ்க்கையில் ஒன்றிணைந்து உள்ளனர்.

விவாகரத்தால் பரபரப்பை உண்டாக்கிய பிரபலங்கள்

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -