மொத்த வித்தையையும் முதல் படத்திலே கொட்டியாச்சு.. அடுத்த படம் எடுக்க திணறிய 5 இயக்குனர்கள்.!

Tamil Directors: சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வெற்றியை நிலை நாட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி விட்டு, அடுத்த படம் எடுக்க முடியாமல் சரக்கு தீர்ந்து போன 5 இயக்குனர்களை பற்றி பார்ப்போம்.

சசிகுமார்: பின்னாளில் நடிகரான இயக்குனர் சசிகுமார் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு சுப்பிரமணியபுரம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். தரமான கதையம்சம் கொண்ட சுப்பிரமணியபுரம் திரைப்படமானது தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படமாகவே அமைந்தது. இதற்கு அடுத்து அவர் ஈசன் என்ற படத்தை எடுத்தார். ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. முதல் படத்திலேயே தனது ஒட்டுமொத்த சரக்கு தீர்ந்து விட்டதை உணர்ந்த சசிகுமார், அதன் பிறகு படங்களை இயக்குவதை காட்டிலும் ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டார்.

Also Read: 2023 இல் முதல் படத்திலே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்.. கவினை தூக்கிவிட்ட டாடா பட கணேஷ்

அழகம்பெருமாள்: மணிரத்தினத்தின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து அதன்பின் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு ‘டும் டும் டும்’ படத்தை வெற்றி படமாக கொடுத்தவர்தான் இயக்குனர் அழகம்பெருமாள். அந்த படத்திற்கு பிறகு ஜூட், உதயா போன்ற படங்களில் மோசமான விமர்சனத்தை பெற்றதால் இனி இயக்கவே கூடாது என அந்த வேலையை மூட்டை கட்டி விட்டு இப்போது குணசித்திர வேடங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

சரவண சுப்பையா: முதல் படமே அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் என்ற ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றி கொடுத்தவர்தான் இயக்குனர் சரவண சுப்பையா. அதற்கு அடுத்து எந்த படத்தையும் வெற்றி படமாக கொடுக்க முடியவில்லை. அதன்பின் படங்களை இயக்குவதில் நாட்டம் கொள்ளாமல் நடிப்பில் ஆர்வம் காட்டினார். பொதுவாக பெரும்பாலான படங்களில் போலீஸ் கெட்டப் என்றால் அது இவருக்கு தான் கச்சிதமாக பொருந்தும் என டாப் இயக்குனர்களும் தங்களுடைய படங்களில் தேர்வு செய்து வருகின்றனர்.

Also Read: சொந்த பையனுக்கு தன் கையாலே சூனியம் வைத்த பாக்கியராஜ்.. சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த அப்பா

தருண் கோபி: விஷால் நடிப்பில் வெளியான திமிரு என்ற கமர்சியல் அதிரடி படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்து, அதற்கு அடுத்து எந்த படத்தையும் வெற்றிப்படமாக கொடுக்க முடியாமல் திணறியவர் இயக்குனர் தருண் கோபி. இவர் அடுத்ததாக ஹீரோவாகவும் படங்களில் நடிக்க துவங்கினார். அதிலும் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் இளைய மகனான பரமன் என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார்.

ஏஜே முருகன்: சிம்புவின் நடிப்பில் இயக்குனர் ஏஜே முருகன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் தான் மன்மதன். இந்த படம் 150 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு ஏஜே முருகன் முதல் படத்திலேயே தனது ஒட்டுமொத்த சரக்கையும் தீர்த்ததால் அடுத்த படத்தை இதுவரை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

Also Read: பழைய ரூட்டுக்கே திரும்பிய சசிகுமார்.. தோள் கொடுக்க வரும் அழகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்