சமீபத்தில் மாரடைப்பால் இறந்து போன 5 காமெடி நடிகர்கள்.. திரை உலகையே உலுக்கிய விவேக், மயில்சாமியின் மரணம்

அண்மைக்காலமாக சினிமா பிரபலங்களின் எதிர்பாராத உயிரிழப்பு நம் அனைவருக்கும் பேரதிர்ச்சியையும், எதுவுமே இவ்வுலகில் நிரந்தரம் இல்லை என்று உணர்த்தும் வகையிலும் அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி நடிகர்களின் மரணம், நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாததாக உள்ளது. அந்த வகையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 5 காமெடி நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கிரேஸி மோகன்: நடிகர், வசனகர்த்தா, கதாசிரியர் என பன்முகத்தன்மை வாய்ந்த கிரேஸி மோகன் அவர்கள், 2019 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி காலமானார். கமலஹாசனின் நெருங்கிய நண்பரும், கலைமாமணி விருதும் பெற்ற கிரேஸி மோகன், தன் வாழ்நாளில் பல சாதனைகளை புரிந்தவர். இந்நிலையில் வயிறு வலி மற்றும் சுவாச கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனது 66 வது வயதில் காலமானார்.

Also Read: ரஜினியின் வீட்டில் சங்கடத்திற்கு ஆளான கிரேஸி மோகன்.. நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!

மயில்சாமி: தமிழ் சினிமாவில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மயில்சாமி, நடிப்பதையும் தாண்டி, டப்பிங் மற்றும் மிமிக்ரி துறையில் கைதேர்ந்தவர். இந்நிலையில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி சிவராத்திரியை சென்னையில் உள்ள சிவன் கோவிலில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து பொதுமக்களுடன் சேர்ந்து மயில்சாமி கொண்டாடினார். இதனிடையே அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பிய மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிர் பிரிந்தார்.

விவேக்: சின்ன கலைவாணர், நகைச்சுவை நடிகர், கலைமாமணி, அப்துல் கலாமின் தீவிர பக்தர் என தன்னை சினிமாவுக்கும், பொதுப்பணிகளுக்கும் அர்ப்பணித்தவர் தான் நடிகர் விவேக். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தனது 59 வது வயதில் காலமான விவேக், நெஞ்சு வலி மற்றும் சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இதயத்தில் திடீரென ஏற்பட்ட அடைப்பால் இதயம் செயலிழந்து விவேக் மரணமடைந்தார். இவர் இறப்பதற்கு முன்பாகத்தான் கோவிட் தடுப்பு மருந்தினை செலுத்திய விவேக், அதன் காரணமாகத்தான் உயிரிழந்திருக்க கூடும் என்ற தகவலும் பரவியது.

Also Read: சிவராத்திரி அன்று சிவனிடம் சென்ற மயில்சாமி.. கடைசி நிமிடங்களில் பேசிய நிறைவேறாத ஆசை

கிருஷ்ணமூர்த்தி: பிரபல காமெடி நடிகரான இவர், நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான
பெண்ணின் மனதை தொட்டு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி காலமானார். கேரளாவில் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.

நெல்லை சிவா: திருநெல்வேலி பாஷையை திரையில் பேசி ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்க வைத்த நெல்லை சிவா அவர்கள், கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்த இவர், தனது 69 வது வயதில் காலமானார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

Also Read: அடுத்தவர்களுக்கு உதவுவதில் வடிவேலுவை ஓரம் கட்டிய விவேக்.. 1000 ரூபாய்க்காக இறங்கி சண்டை போட்ட சம்பவம்

- Advertisement -