ஓய்வு பெற்று கவுரவ தோற்றத்தில் நடிக்கும் 5 காமெடி நடிகர்கள்.. சிவகார்த்திகேயன் அப்பாவாக கலக்கும் சார்லி

சினிமாவில் தங்கள் நடிக்கும் படங்களின் மூலம் குணச்சித்திரம், காமெடி கதாபாத்திரம் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சில நடிகர்கள், ஒரு காலகட்டத்திற்கு பின் காணாமல் போய்விடுகின்றன. ஆனாலும் சிறிது இடைவேளைக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து வருகின்றனர். அப்படியாக ஓய்வு பெற்று தற்பொழுது படங்களில் நடித்து வரும் 5 காமெடி நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

சின்னி ஜெயந்த்: சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், பல குரலில் பேசும் கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்டு திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனது படங்களில் காமெடி, குணச்சித்திரம் என 300க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராகவே வலம் வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் கௌரவமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read: காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் இயக்குனரா? மூன்று படங்கள் டைரக்ட் பண்ணிருக்காரு!

சார்லி: பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் சார்லி. அதிலும் தனது படங்களின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், துணை நடிகராகவும் 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அதிலும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்து மாஸ் காட்டி இருப்பார்.

இளவரசு: தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் இளவரசு. அதிலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலமும், நகைச்சுவை கலந்த பேச்சின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இவர் காமெடியையும் தாண்டி நல்ல கதை அம்சம் கொண்ட கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Also Read: ஒளிப்பதிவு மூலம் அசத்திய இளவரசு.. ரசிகர்களை பிரமிக்கச் செய்த 5 படங்கள்

டெல்லி கணேஷ்: இயக்குனர் கே பாலச்சந்தர் ஆல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் டெல்லி கணேஷ். இவர் தனது படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் ஆல் ரவுண்டாக நடித்து அசத்தியிருப்பார். அதிலும் கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பின்னர் டாப் ஹீரோக்களின் படங்களில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எம்எஸ் பாஸ்கர்: சினிமாவில் குணச்சித்திரம், காமெடியன், டப்பிங்  ஆர்டிஸ்ட் என பன்முகத்திறமை கொண்டவர் தான் எம்எஸ் பாஸ்கர். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மூலமும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அதிலும் தற்பொழுது சினிமாவில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Also Read: நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த 5 துணை கதாபாத்திரங்கள்.. கமலே வியந்து பார்த்த MS பாஸ்கர்