எப்படிறா! சினிமாவில் காட்டாமலேயே புகழடைந்த 5 கேரக்டர்கள்.. யாரு தான் சாமி அந்த சொப்பன சுந்தரி

பொதுவாக சினிமாவில் தங்களது முகம் ரசிகர்களுக்கு தெரிந்து விட வேண்டும் என பல நடிகர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கே தெரியாத இடத்தில் திரையில் காணப்பட்டார். இப்போது ஒரு முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி பலர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் வெறும் பெயரை மட்டுமே பயன்படுத்தி பெரிய அளவில் ரசிகர்களிடம் சில இயக்குனர்கள் கொண்டு சென்றுள்ளார்கள்.

கிரி : அர்ஜுன் மற்றும் வடிவேலு காமினேஷனில் வெளியான திரைப்படம் தான் கிரி. இதில் பேக்கரி நடத்தி வரும் வீரபாகு கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இந்தப் படத்தில் தனது அக்காவை வைத்து தான் பேக்கிரியை வாங்கியதாக வடிவேலு சொல்லும் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து. இப்போதும் வீரபாகு அக்கா என்றால் உடனே ஞாபகம் வருவது கிரி படம் தான்.

துள்ளாத மனமும் துள்ளும் : விஜய், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துள்ளாத மனமே துள்ளும். இதில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். இதில் தனது அம்மாவுக்கு குட்டி லெட்டர் போடுவது மற்றும் சம்பளம் அனுப்புவது போல காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும். கடைசியில் குட்டி அம்மா இறந்ததாக மட்டுமே செய்தி வந்திருக்கும். அவரது முகத்தை படத்தில் காட்டி இருக்க மாட்டார்கள்.

உத்தம ராசா : பிரபு, குஷ்பூ மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தமராசா. இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் இடையே ஆன காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செந்திலின் முகத்தை பார்த்து விட்டு கொடுத்த கடனை வாங்க வடக்குப்பட்டி ராமசாமி சந்திக்க செல்வார் கவுண்டமணி. ஒவ்வொரு தடங்கலாக வர கடைசியில் வடக்குப்பட்டி ராமசாமியை இறந்து விடுவார். இதில் யார் வடக்குப்பட்டி ராமசாமி என்பதை காண்பிக்க மாட்டார்கள்.

மூக்குத்தி அம்மன் : ஆஜே பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் நகைச்சுவை படமாக வெளியானது மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் ஊர்வசி எதுக்கெடுத்தாலும் பக்கத்து வீட்டு அம்மாவான ராணியை கூப்பிடுவார். ஆனால் அந்த ராணி யார் என்பது கடைசி வரை படத்தில் இடம் பெற்றிருக்க மாட்டார்கள். வெறும் பெயரை மட்டுமே பயன்படுத்தி இருந்தனர்.

கரகாட்டக்காரன் : ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இந்தப் படத்தில் காரை தள்ளிக் கொண்டு போகும்போது சொப்பன சுந்தரி பற்றி பேசுவார்கள். சொப்பன சுந்தரி யாரு இப்ப வச்சிருக்கா என்ற டயலாக் இப்போது வரை ஃபேமஸ். மேலும் சொப்பன சுந்தரி என்ற வார்த்தையை வைத்து பாடலும் அதன் பிறகு வெளியாகி இருந்தது.