ஹீரோ ஹீரோயினை விட அதிக பாராட்டு வாங்கிய 5 கதாபாத்திரங்கள்.. சூர்யாவை ஓரமாய் நிக்க வைத்த கேரக்டர்

பொதுவாகவே சினிமா துறையில் எந்த படங்களாக இருந்தாலும் அதற்கு அதிக அளவில் விமர்சனம் பெறக்கூடியவர்கள் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் தான். அவர்களை தான் ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடி வருவார்கள். அப்படிப்பட்ட ஹீரோ ஹீரோயின்களின் படத்தில் அவர்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு சில கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். அந்த கதாபாத்திரங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

பசங்க: பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படம் வெளிவந்தது. இதில் கிஷோர் டி எஸ், ஸ்ரீராம், பாண்டியன், விமல் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் என்னதான் விமல் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவரை ஓவர் டெக் செய்து அதிக வரவேற்பை ஏற்படுத்திய அந்த மூன்று பசங்களுடைய கேரக்டர் தான் மக்களிடம் அதிக அளவில் பேசப்பட்டது. இவர்களால் தான் இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றது. அதிலும் கிஷோர் டிஎஸ் மற்றும் ஸ்ரீராம் இவர்களுக்கு சிறந்த குழந்தை கலைஞர் தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

Also read: மார்க்கெட் இல்லாமல் தவித்த விமல் .. அடுத்தடுத்து ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் 7 படங்கள்

நேர்கொண்ட பார்வை: எச் வினோத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் வித்யா பாலன் ஆகியோர் நடித்தார்கள். இதில் மூன்று பெண்கள் சுதந்திரமாக சென்னையில் வசித்து வருகிற மாதிரி இப்படம் அமைந்திருக்கும். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீரா என்ற கதாபாத்திரம் அஜித்துக்கு இணையாக மிகவும் பாராட்டை பெற்ற கதாபாத்திரமாக அமைந்திருக்கும்.

ஜெய் பீம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சூர்யாவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்து கதைகள் அமைந்திருக்குமோ அதே மாதிரி செங்கேனி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் பாராட்டுகளை பெறக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும் . இதில் இவருடைய எதார்த்தமான நடிப்பிற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

Also read: வாடிவாசலுக்கு தயாராகும் காளைகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடும் சூர்யா

கடைசி விவசாயி: மு. மணிகண்டன் இயக்கத்தில் கடந்த வருடம் கடைசி விவசாயி என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கதைக்கு ஏற்ற மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் மாயாண்டி தாத்தா என்பவர் சிக்கனமான விவசாயி வாழ்க்கையே வாழ்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.  இதில் இவர் தான் உண்மையான ஹீரோவாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மஞ்சப்பை: என்.ராகவன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு மஞ்சப்பை திரைப்படம் வெளிவந்தது. இதில் விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விமல் என்னதான் ஹீரோவாக இருந்திருந்தாலும் அவரைவிட ஓவர் டேக் செய்யும் அளவிற்கு ராஜ்கிரண் எல்லாருடைய கவனத்தையும் திசை திருப்பி இருப்பார். இது விமல் படம் என்று சொல்வதை விட ராஜ்கிரன் படம் என்று சொல்லும் அளவிற்கு தான் பெரிய வரவேற்பை பெற்றது.

Also read: ஏகே 62 டைட்டில் வெளியானது.. மீண்டும் வி சென்டிமென்டில் சிக்கிய அஜித்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்