தனுஷை தவிர வேற யாருக்கும் செட் ஆகாத 5 கதாபாத்திரங்கள்.. நடிப்புக்கு நீ தான் அசுரன்

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் தான் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டங்களில் இவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. ஆனால் தற்பொழுது இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. அதிலும் இந்த கதாபாத்திரத்தில் தனுஷை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்ற அளவிற்கு புகழின் உச்சியை தொட்டுள்ளார். அப்படி தனுஷ் நடிப்பில் வெளிவந்து யாருக்கும் செட்டாகாத 5 படங்களை இங்கே காணலாம்.

கர்ணன்: இயக்குனர் மாரி செல்வ ராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கர்ணன். இப்படமானது கொடியன்குளம் ஜாதி கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ஆகும். இதில் தனுஷ் கர்ணன் கதாபாத்திரத்தில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: இயக்குனராக இருந்து குணச்சித்திர நடிகராக முத்திரை பதிக்கும் நடிகர்.. அசுரனில் தனுஷை அலைய விட்ட பிரபலம்

அசுரன்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இதில் தனுஷ் உடன் மஞ்சுவாரியர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதில் ஜாதியினை மையமாக வைத்து ஏற்படும் கலவரங்களின் மூலம் ஏற்படும் பாதிப்பினை எதிர்கொள்பவராக தனுஷ் மிக அருமையாக  நடித்திருப்பார்.

வேலையில்லா பட்டதாரி: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இன்றைய இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை தனது நடிப்பின் மூலம் கண்முன்னே கொண்டு வந்திருப்பார் தனுஷ்.

Also Read: அடுத்த நேஷனல் அவார்டை தட்டி தூக்க போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்

ஆடுகளம்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இதில் சேவல் சண்டையை  மையமாக கொண்டு இப்படமானது உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் கருப்பு என்னும் கதாபாத்திரத்தில் சேவல் சண்டையின் போட்டியாளராக நடித்துள்ளார்.

காதல் கொண்டேன்: 2003 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் உடன் சோனியா அகர்வால் இணைந்த நடித்து வெளிவந்த திரைப்படம் காதல் கொண்டேன். இவர்களுக்குள் நடக்கும் காதலை மிக அருமையாக காண்பித்துள்ளனர். இப்படம் தனுஷின் திரை வாழ்விற்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றை சொல்லலாம்.

இவ்வாறு இந்த 5 படங்களிலும் தனுஷை தவிர மற்ற எந்த ஹீரோ நடித்திருந்தாலும் படம் அந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். அதிலும் தனுஷ் அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் நடிப்புக்கு நீதான் கிங் என்ற அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Also Read: அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் தனுஷின் ஐந்து பார்ட் 2 படங்கள்.. வெற்றிமாறனுக்கு மட்டும் ஒரு வருடம் கால்ஷீட்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்