ஹீரோக்களை விட அதிகம் பேசப்பட்ட 5 கதாபாத்திரங்கள்.. மிரட்டிய குட்டி பவானி!

சமீபத்தில் வெளியான படங்களில் ஹீரோக்களை விட படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, அவர்களது மனதில் இன்றுவரை நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற குட்டி பவானி. இதில் மகேந்திரன் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்ட இருப்பா.ர் இவரைப் போன்றே இன்னும் சில கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் மனதைத் தொட்டு இருக்கிறது.

மணிகண்டன்: சூர்யா நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் தத்ரூபமான தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் மணிகண்டன். மேலும் பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே சமூகத்தில் அவர்களுக்கு இழைக்கும் அநீதிகளை குறித்தும் தோலுரித்துக் காட்டப்பட்ட இந்தப் படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மணிகண்டனுக்கு தனி அடையாளமே கிடைத்தது என்று சொல்லலாம்

லால்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த கர்ணன் திரைப்படத்தில் மலையாள நடிகர் லால் நடித்த ஏமராஜா கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கர்ணன் படத்தில் மலையாள நடிகர் லால் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியது மட்டுமல்லாமல் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இந்த படத்தில் தனித்துவமான படத்திற்குரிய வட்டார மொழியில் தனது சொந்தக் குரலிலேயே பேசி இருந்தது ஏமராஜா கதாபாத்திரத்தை முழுமை அடைய செய்தது.

ஷபீர் கல்லரக்கல்: பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா திரைப்படத்தில் நடிகர் ஷபீர் கல்லரக்கல் நடித்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் அந்தப் படத்தில் நடித்த மற்ற பிரபலங்களை காட்டிலும் பெரிதும் பேசப்பட்ட கதாபாத்திரம் ஆனது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் பிரின்ஸ் நசீம் ஹமீத் அவருடைய பாக்சிங் ஸ்டைலை அப்படியே பின்பற்றி, டான்ஸ் ஆடிக்கொண்டே பாக்சிங் செய்வது போன்று இந்தப் படத்தில் நடித்த ஷபீர், டான்சிங் ரோஸ் ஆக இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டார்.

ஜான் விஜய்: பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஜான் விஜய் ஏற்று நடித்திருந்த டாடி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் இவர் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் ஆங்கிலோ டாடியாக செம ஜாலியாக தத்ரூபமாக நடித்திருப்பார். ஐ லவ் யூ டாடி என பலரையும் சொல்ல வைத்த ஜான் விஜய்யின் நடிப்பு பல தருணங்களில் படத்தில் நடித்த மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக நடிக்கிறார் என சொல்ல வைத்திருக்கிறது.

மகேந்திரன்: குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மாஸ்டர் மகேந்திரன், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய வேறொரு கோணத்தை காட்டியிருப்பார். துளிக்கூட நல்லவன் இல்லாத பவானி கதாபாத்திரத்தில் சிறுவயதில் பக்கா லோக்கல் ரவுடியாக குட்டி பவானி கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இதில் மகேந்திரன் சில நிமிடம் மட்டுமே திரையில் தோன்றினாலும் அதை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் குட்டி பவானியாக நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தில் அவர்களுக்கு நிகராக அந்த படத்தில் நடித்த குட்டி பவானி கதாபாத்திரமும் இன்றும் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்