பிக் பாஸுக்குள் போயும் பிரயோஜனம் இல்லாமல் வந்த 5 பிரபலங்கள்.. உச்சகட்ட அவமானத்தை சந்தித்த சேரன்

5 Contestant No use for Bigg Boss:  சினிமாவிற்குள் ஆசையுடன் ஜெயிக்க வேண்டும் என்று நுழைந்த பலரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதில் சிலர் தோல்விகளால் துவண்டு போயிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கான திறமையை மக்களிடத்தில் காட்டி நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அப்படி அவர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு தான் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மக்களிடத்தில் பிரபலமாகிவிடலாம். அதன் மூலம் நமக்கும் நல்ல ஒரு எதிர்காலம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சிலர் போயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் போயும் அங்கே பிரயோஜனம் இல்லை என்பதற்கு ஏற்ப அவமானத்தை மட்டுமே சந்தித்து வெளியே வந்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

கஞ்சா கருப்பு: இவருடைய பேச்சே வித்தியாசமாகவும் நக்கல் மற்றும் நையாண்டியுடன் இருக்கும். முக்கியமாக படத்தில் மற்ற நடிகர்கள் இவரை சீண்டி பார்ப்பதே காமெடியாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட இவர் தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நிற்க முடியாமல் போய்விட்டது. அந்த வகையில் இவரை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு நுழைந்தார். போன இடத்தில் காமெடி மட்டும் செய்திருந்தால் தற்போது நகைச்சுவை நடிகராக இருந்திருப்பார். ஆனால் அங்க போய் வன்மத்துடன் பேசின பேச்சுக்கள் அனைவரையும் வெறுக்க வைத்து விட்டது. அதனாலயே போன இடம் தெரியாமல் திரும்பி வந்து விட்டார்.

சரவணன்: ஆரம்பத்தில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வெற்றியை கொடுத்திருக்கிறார். அதன் பின் போகப் போக இவர் காண வாய்ப்புகள் குறைந்து போன நிலையில் சினிமா விட்டு சற்று தூரம் போய்விட்டார். இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் மூலம் மறுபடியும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதே நேரத்தில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு போக வாய்ப்பு கிடைத்ததால் அங்கே போனார். போன இடத்தில் தேவையில்லாமல் லூஸ் டாக் விட்டதால் அது வெளியே சர்ச்சையாகி இதிலிருந்து நீக்கப்பட்டார்.

சேரன்: பல குடும்பங்களில் இவரை தூக்கிக் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இவர் எடுக்கக்கூடிய படங்களும் கதைகளும் தான். அந்த அளவிற்கு மண்மனம் மாறாத பொக்கிஷமான படங்களை கொடுப்பதில் மிகச் சிறந்த இயக்குனர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவருடைய போதாத காலம் இவருடைய படங்கள் சரியாக எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் சீசன் 3. இதன் மூலம் தன்னுடைய முகத்தை காட்டி மறுபடியும் மக்களிடம் பரிச்சயமாக வேண்டும் என்று ஆசையில் உள்ளே நுழைந்தார். ஆனால் அங்கு போனதிலிருந்து ஒவ்வொரு நாளும் அவமானத்தை மட்டுமே சந்தித்தார்.

சிங்கர் வேல்முருகன்:  நிறைய கானா பாடல்களை பாடிய இவர், மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்ற ஒரு ஆசையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நுழைந்தார். ஆனால் அங்க போய் நிறைய அவமானங்களையும் பிரச்சனைகளை தான் சந்தித்தார். அதனாலேயே போன வேகத்தில் வெளியே திரும்பி வந்து விட்டார்.

பாவா செல்லதுரை: சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என்று வெளியில் நல்ல பரிச்சயமான இவர் தற்போது போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அங்கு போய் இவரால் தாக்குப் பிடிக்க முடியாததால் இந்த நிகழ்ச்சியில் இருந்து அவரே வெளியே வந்து விட்டார். இதற்கு இடையில் இவர் உள்ளே இருக்கும் பொழுது பாவா செல்லதுரை ஏன் அங்கே போனார். அங்கே போனவர்கள் சிலர் பெயரை கெடுத்துக் கொண்டுதான் வெளியே வந்திருக்கிறார்கள் என்று இவருக்காக அனுதாபத்துடன் பலரும் பேசி இருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்