எமன் பாசகயிற்றில் இருந்து தப்பித்து வாழும் 5 பிரபலங்கள்.. ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து வரும் கேப்டன்

5 Celebrities Health Issue: தமிழ் சினிமாவில் உள்ள சில பிரபலங்களுக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனைனாலும், தேவையில்லாத பழக்கத்தினாலும் அவர்களுடைய உடல் நிலை மிகவும் பாதிப்படைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடைசி வரை எமனிடமிருந்து போராடி மீண்டு வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில பிரபலங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ரோபோ சங்கர்: கடந்த சில மாதங்களுக்கு முன் ரோபோ சங்கர் உடல்நிலைக்கு என்ன ஆனது என்று தெரியாமலேயே ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் இவருடைய குடிப் பழக்கமாக இருந்தாலும், உண்மையான காரணம் என்னவென்று இவருடைய மனைவி தெளிவாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் மஞ்சள் காமாலை ரொம்பவே அதிகமானதால் ரத்தத்தில் கலந்து விட்டது. அதனால் தான் உடல் மெலிந்து ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். தற்போது இதையெல்லாம் சரி செய்து மீண்டும் கேரியரில் இவருடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

ரஜினிகாந்த்: 2011 ஆம் ஆண்டு சிறுநீரக கோளாறால் சிங்கப்பூர் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவருடைய உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று பல வதந்திகள் கிளம்பியது. ஆனால் அந்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லை மருத்துவரின் அறிவுரைப்படி குணமாகிவிட்டேன் என்று வீடு திரும்பினார். அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்படி தொடர்ந்து உடல் நிலை பிரச்சனை ஏற்பட்டு பல வழிகளில் போராடி மீண்டு வந்திருக்கிறார்.

Also read: ரஜினிகாந்த், லதாவை திருமணம் செய்ய இப்படி ஒரு காரணமா?. பலே திட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

விஜயகாந்த்: இவரை பொருத்தவரை ரொம்பவே கம்பீரமாகவும் துணிச்சலான பேச்சுடன் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அப்படிப்பட்ட இவருக்கு நேரம் சரியில்லை என்றே சொல்லியாக வேண்டும். தேவையில்லாத குடி பழக்கத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக நோயை இழுத்துக் கொண்டார். இதனால் தற்போது இவரால் சுயநினைவுடன் பேசக்கூட முடியாத அளவிற்கு தடுமாறி வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் இவருடைய உயிரை கையில் பிடித்துக் கொண்டு போராடி வருகிறார்.

கவுண்டமணி: தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும், கவுண்டமணியின் கவுண்டருக்கு ஈடு இணையான காட்சிகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இவர் இடைப்பட்ட காலத்தில் ரொம்பவே மெலிந்து போய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அதற்கு இவருடைய குடிப்பழக்கமும் ஒரு காரணம். அதனாலேயே இவருடைய உடல்நிலைக்கே அடிக்கடி பிரச்சினைகள் வந்து மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வரும் படி அமைந்துவிட்டது.

ஆனந்த் பாபு: ஆரம்பத்தில் இவருடைய படங்கள் ஓரளவுக்கு மக்களிடம் வரவேற்பு பெற்றாலும், போகப்போக கேரியரில் தோல்வியை சந்தித்து வந்தார். இதனால் சினிமாவை விட்டு விலகி தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் சினிமாவில் இவரால் சாதிக்க முடியாமல் போனதற்கு காரணம் இவருடைய குடிப்பழக்கம் தான். அளவுக்கு அதிகமாக குடித்ததால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை இழந்து உடல் அளவில் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார். இதை எல்லாம் தாண்டி சின்னத்திரை சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.

Also read: வளர்த்த கடா உயர்வது பொறுக்காத விஜயகாந்த்.. இன்றுவரை கேப்டன் மேல் உள்ள ஒரே கரும்புள்ளி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்