Actor Sivakarthikeyan: லியோ நாளை வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் அதையே அமுக்கிவிட்டு முன்னேறி இருக்கிறது சிவகார்த்திகேயன் விவகாரம். ஏற்கனவே இமானுக்கும் இவருக்கும் பிரச்சனை என்று பேசப்பட்ட நிலையில் தற்போது வெளிவரும் ஒவ்வொரு செய்திகளும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதனால் இப்போது அவர் சர்வமும் அடங்கிப்போன நிலையில் இருக்கிறார். எப்படியாவது இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கான ஆலோசனைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்ற கதையாக சிவகார்த்திகேயனால் 5 பேர் பரவச நிலையில் இருக்கிறார்களாம்.
அதில் சந்தானம் தான் உச்சகட்ட குஷியில் குத்தாட்டம் போட்டு வருகிறாராம். ஏனென்றால் இருவருமே விஜய் டிவியிலிருந்து தான் வந்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ அந்தஸ்தை அடைந்து விட்டார். இதனால் சந்தானம் புகைச்சலில் இருப்பதாக ஒரு செய்தி உண்டு.
அதேபோன்று சிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட பிரபலங்களில் முக்கியமானவர் தனுஷ். ஆனால் தற்போது இருவரும் சுமூகமான நட்பில் கிடையாது. அது மட்டுமல்லாமல் நீயா நானா என்ற போட்டியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக தொழில் ரீதியான போட்டியில் சிம்புவுக்கும் இவருக்கும் கூட ஒரு உரசல் இருக்கிறது.
மேலும் மிஸ்டர் லோக்கல் பட பிரச்சனையும் நீதிமன்றம் வரை சென்றது. ஞானவேல் ராஜா தனக்கு நான்கு கோடி வரை சம்பள பாக்கி வைத்திருப்பதாக சிவகார்த்திகேயன் வழக்கு தொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது. அதை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமின் இயக்கத்தில் ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது.
அதனாலயே சீமராஜாவுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் இருவருக்குள்ளும் சிறு மனகசப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு இவர்களின் கூட்டணி இதுவரை இணையவில்லை. இப்படியாக இந்த ஐந்து பிரபலங்களுடனும் சிவகார்த்திகேயனுக்கு ஏதோ ஒரு விதத்தில் கருத்து வேறுபாடு இருந்தது. அதனாலேயே இந்த விவகாரத்தில் குளிர் காய்வது போல் இவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.