வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நம்மை கவர்ச்சியால் கட்டி போட்ட 5 ஐட்டம் சாங்ஸ்.. அஜித்தே இறங்கி குத்திய அந்தப் பாடல்

சினிமாவை பொருத்தவரையிலும் சமீப காலமாகவே டாப் ஹீரோக்களின் படங்களில் ஐட்டம் பாடல்கள் ஆனது இடம்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்பொழுது வருகின்ற ஐட்டம் பாடல்கள் எல்லாம் முகம் சுளிக்க கூடிய வகையிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளது. ஆனால் கவர்ச்சி பாடல்களாகவே இருந்தாலும்  அனைவரது மனங்களையும் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

கன்னித்தீவு பொண்ணா: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு சேரன் நடிப்பில் வெளியான திரைப்படம் யுத்தம் செய். மேலும் இப்படத்திற்கு கே கிருஷ்ணகுமார் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா என்ற ஐட்டம் பாடல் அனைவரையும் சுண்டி இழுத்த பாடல் என்றே சொல்லலாம். அதிலும் இப்பாடல் இன்றைய இளசுகளையும் கூட குத்தாட்டம் போட வைத்தது. 

Also Read: முதல் படத்திலேயே சேரனை அசிங்கமாக திட்டிய கமல்.. 28 வருடம் மறக்காத அவமானம்

வாடா வாடா பையா: ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் கச்சேரி ஆரம்பம். மேலும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் வரும் வாடா வாடா பையா என் வாசல் வந்து போயா என்னும் பாடல் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல் ஆகவே இருந்து வருகிறது.

டாடி மம்மி வீட்டில் இல்ல: பிரபுதேவா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வில்லு. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள டாடி மம்மி வீட்டில் இல்ல என்னும் கவர்ச்சியான பாடலில் விஜய் இரண்டு நாயகிகளுடன் நடனத்தில் மாஸ் காட்டி இருப்பார். இதனைத் தொடர்ந்து இந்தப் பாடலானது இளசுகளின் மத்தியில் மிகவும் பிரபலமானது.

Also Read: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான லோகேஷ்.. அதிரடியாக கண்டிஷன் போட்ட விஜய்

வாளமீனுக்கும் விளங்கு மீனுக்கும்: இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு நரேன் நடிப்பில் வெளியான திரைப்படம் சித்திரம் பேசுதடி. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு சுந்தர் சி பாபு  இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாளமீனுக்கும் விளங்கு மீனுக்கும் என்ற பாடல் இன்றுவரையிலும் பிரபலமாக இருந்து வருகிறது. அதிலும் மஞ்சள் புடவை அணிந்து மாளவிகா ஆடிய ஐட்டம் டான்ஸ் தான் இன்று வரையிலும் அனைவரையுமே குத்தாட்டம் போட வைக்கிறது என்றே சொல்லலாம்.

ஆசை தோசை அப்பளம் வடை: பி.வாசு இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பரமசிவன். மேலும் இப்படத்திற்கு வித்தியாசாகர்  இசையமைத்துள்ளார். அதிலும் இவரது இசையில் வெளிவந்த ஆசை தோசை அப்பளம் வடை என்னும் பாடலில் நடிகர் அஜித்தே நடனத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். அது மட்டுமல்லாமல் இந்தப் பாடலுக்கு யாராலும் ஆடாமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு அனைவரின் பேவரட் பாடல்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.

Also Read: AK62 மூச்சு பேச்சு காணும்.. இதுல அடுத்த படத்திற்காக 4 இயக்குனரிடம் கதை கேட்ட அஜித்

- Advertisement -

Trending News