ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான கதைகள்.. ஆண்களுக்கு சவுக்கடி கொடுத்த கிரேட் இந்தியன் கிச்சன்

தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெறக் கூடியவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதிலும் சமீப காலமாக தனது படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதையினை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான படங்களை இங்கு காணலாம்.

ரம்மி : பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரம்மி. இதில் விஜய் சேதுபதி உடன் இனிகோ பிரபாகரன், சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் 1987 இல் நடக்கும் காதல் கதையினை மையமாக வைத்து இந்த படமானது அமைந்துள்ளது. அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் சொர்ணம் என்னும் கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாகவே தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார். 

Also Read: ப்ளாப் ஆனாலும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியலையாம்

பிளான் பி : விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான குற்றவியல் திரைப்படம் ஆகும். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பாவெல் நவகீதன், அனன்யா ராம் பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது உயிர் தோழியின் சாவுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கனா : அருண் ராஜா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு விளையாட்டை மையமாக வைத்து வெளியான திரைப்படம் தான் கனா. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் சத்யராஜ், சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களாலும் கிரிக்கெட் விளையாட்டை, ஆண்களுக்கு நிகராக விளையாட முடியும் என்று தனது நடிப்பு திறமையின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: காசுக்காக சீப்பான வேலையை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்

டிரைவர் ஜமுனா : இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் ஆடுகளம் நரேன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அப்பாவின் மறைவிற்குப் பிறகு, அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார். மேலும் ஜமுனா என்னும் அழுத்தமான கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் : இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் குடும்பப் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் இப்படத்தில் குடும்பத்தில் பெண்கள் படும் துயரங்களை விவரிக்கும் கதாபாத்திரத்தில், கனகச்சிதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: பெண்களின் உழைப்பை சுரண்டும் குடும்பங்கள்.. மலையாள சினிமாவை மிஞ்சியதா தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்

- Advertisement -