பிரகாஷ்ராஜ் நடிப்புக்கு தீனி போட்ட 5 படங்கள்.. கொழுந்தியாளை அடைய நினைத்த ஆசை படம்

பிரகாஷ்ராஜ் பொருத்தவரையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுக்க கூடியவர். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என நடிக்காத கதாபாத்திரங்களை இல்லை. இந்த கதாபாத்திரங்களுக்கு பிரகாஷ்ராஜ் தான் கரெக்டாக இருப்பார் என சொல்லும் அளவுக்கு சில படங்கள் உள்ளது. இவ்வாறு அவரது நடிப்புக்கு தீனி போட்ட 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

ஆசை : அஜித், சுபலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆசை. இந்த படத்தில் மாதவன் என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். தனது உன் மனைவியின் தங்கையை அடைய வேண்டும் என்பதற்காக பல வேலைகள் செய்யும் கொடூர வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.

Also Read : பிரகாஷ்ராஜ் காமெடியில் கலக்கிய 5 படங்கள்..தேங்காய் சீனிவாசன் போல் லூட்டி அடித்த தில்லுமுல்லு

கல்கி : பாலச்சந்தர் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ரகுமான், சுருதி, கீதா மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் கல்கி. இந்தப் படத்தில் மனைவியை பல கொடுமை செய்யும் பிரகாஷ்ராஜ் வேறு ஒரு பெண்ணால் அதை அப்படியே அனுபவிப்பார். அந்தப் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்து இருந்தார்.

அப்பு : பிரசாந்த், தேவயானி மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் அப்பு. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மகாராணி என்ற திருநங்கை ஆக நடித்திருந்தார். மிகவும் துணிச்சலாக அந்த கதாபாத்திரத்தை ஏற்று தத்ரூபமாக நடித்து அசத்து இருந்தார் பிரகாஷ் ராஜ். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தது.

Also Read : ஆஸ்கார் இல்ல, பாஸ்கர் விருது கூட கிடைக்காது.. பதான் புகட்டிய பாடம்! கிழித்து தொங்க விட்ட பிரகாஷ்ராஜ்

கில்லி : சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து இருந்தார். இதற்கு முன்னதாக இவர்களது காம்போவில் வெளியாகி வெற்றி பெற்ற படம் கில்லி. இந்த படத்தில் திரிஷா மீது பைத்தியமாக இருக்கும் படி பிரகாஷ்ராஜ் நடித்து அசத்து இறந்தார்.

இருவர் : மணிரத்தினம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் இருவர். இந்த படத்தில் அரசியல்வாதியாக பிரகாஷ்ராஜ் நடித்து அசத்தியிருந்தார். அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருவர் படம் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் பிரகாஷ்ராஜ் பெற்றிருந்தார்.

Also Read : முரட்டு வில்லனாக 5 குடும்பப் படங்களில் கலக்கிய பிரகாஷ்ராஜ்.. எல்லாமே சூப்பர் ஹிட்டுனா எப்படி ப்ரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்