முத்தக்காட்சியின்னா உங்களுக்கு நோ கால்ஷீட்.. 90-களில் தயாரிப்பாளரை ஓட விட்ட 5 நடிகைகள்

90’s Heroine: ஹீரோயின்களை பொறுத்தவரை, பட வாய்ப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதைவிட தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு மிகுந்த கவனம் காட்டுகின்றனர்.

அவ்வாறு இமேஜை கொண்டு முத்த காட்சிகளில் ஏற்க மறுத்து, தன் கால்ஷீட்டை தர மறுத்த ஹீரோயின்களும் தமிழ் சினிமாவில் உண்டு. மேலும் இக்காட்சிகளுக்கு நோ சொல்லி தயாரிப்பாளர்களை ஓட விட்டு 5 நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

Also Read: மீண்டும் மீண்டும் விஜய் மானத்தை வாங்கும் எஸ்.ஏ.சி.. 78வது பிறந்த நாளின் ஷாக்கிங் புகைப்படம்

நதியா: பூவே பூச்சூடவா என்னும் படத்தில் அறிமுகமாகி, அதன் பின் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தவர் நதியா. தன் எதார்த்தமான நடிப்பிற்கு கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்ட இவர் தன் உடலுக்கும், கதாபாத்திரத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் இவர் இன்று வரை படத்தில் முத்த காட்சிகள் ஏற்காமல் தன் கொள்கையில் சாதித்துள்ளார் என்றே கூறலாம்.

ரேவதி: 90ஸ் காலகட்டத்தில் எந்த கெட்டப் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பதில் வல்லவர் ரேவதி. அவ்வாறு மண்வாசனை படத்தில் கிராமத்து கேட்ட பில் அசத்திய இவர் புன்னகை மன்னன் படத்தில் மாடர்ன் கெட்டப்பை ஏற்று நடித்திருப்பார். தன் நடிப்பில் இத்தகைய ஆர்வம் கொண்டு இவர் நடித்த எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டது. இருப்பினும் படத்தில் முத்த காட்சிகளுக்கு கால்ஷீட் கொடுக்காமல் பல பட வாய்ப்புகளை நிராகரித்தும் உள்ளார்.

Also Read: குரங்கு கையில பூமாலை கிடைச்ச கதைதான்.. எதையும் சரியாகப் பயன்படுத்தாத மாரி செல்வராஜ்

ஊர்வசி: பன்முக திறமை கொண்ட இவர் மலையாளத்திலும், தமிழிலும் எண்ணற்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பல விருதுகளும், புகழும் பெற்றார். தன் முகபாவணையாலும், சாந்தமான தோற்றத்தாலும் 90களில் புகழின் உச்சியில் இருந்த இவர் ஒருபொழுதும் தன் படத்தில் முத்த காட்சிகளுக்கு அனுமதித்ததில்லையாம். அவ்வாறு தன் கொள்கையால் தயாரிப்பாளர்களை ஓடவிட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

அமலா: 90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன் நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. மேலும் காதல் படங்களில், இவரின் ரொமான்ஸ் மக்களிடையே பெரிதளவு பேசப்பட்டாலும், முத்த காட்சி இடம் பெறும் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒடுக்கும் சமூகத்தினரின் கதையை வைத்து ஹிட் அடித்த 5 படங்கள்.. பிளாக்பஸ்டரில் பட்டையை கிளப்பிய சூர்யா

சுகாசினி: 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக ஏற்ற பல கேட்டப்பில் பெரிதும் பேசப்பட்ட இவர் கவர்ச்சியான நடிப்பினை ஒரு பொழுதும் வெளிக்காட்டியது இல்லை. அதுபோன்ற படங்களுக்கு இவரின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். அவ்வாறு தயாரிப்பாளர்கள் தரப்பில், கால்ஷீட் கிடைக்காமல் சுத்த விட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்