ஆபரேஷன் செய்து அழகை கெடுத்துக் கொண்ட 5 நடிகைகள்.. மொத்தமாய் ஓரம் கட்டப்பட்ட ஹன்சிகா

Plastic surgery gone wrong on these 5 actresses: கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும் தான் நடிகைகளை இயற்கையான அழகு என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள். இப்போது எல்லாமே செயற்கை மயமாக்கி விட்டது. நடிகைகள் தங்கள் முகத்தில் அல்லது உடம்பில் எந்த பகுதி சரியில்லை என்று நினைக்கிறார்களோ அதை உடனே ஆபரேஷன் செய்து மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சிலருக்கு இது கை கொடுக்கிறது பலரும் இந்த ஆபரேஷன் மூலம் தங்களுடைய அழகைதான் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி மோசம் போன முக்கியமான ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

அழகை கெடுத்துக் கொண்ட 5 நடிகைகள்

ஹன்சிகா: எல்லாம முன்னணி நடிகைகளும் சைஸ் ஜீரோ என ஓடிக் கொண்டிருந்தபோது மும்பையில் இருந்து இறக்குமதியாக கொழு கொழு என வந்தவர் தான் ஹன்சிகா. எங்கேயும் காதல் படத்தில் அறிமுகமான இவரை எல்லோரும் சின்ன குஷ்பூ என்று கூட ஆசையாக அழைத்தார்கள். தேவையில்லாமல் உடம்பை குறைக்கிறேன் என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ஆபரேஷன் செய்து ரொம்பவும் ஒல்லியாக மாறினார். அதோடு சினிமாவில் ஹன்சிகாவின் வாய்ப்புகள் அஸ்தமனம் ஆகிவிட்டது.

கேத்தரின் தெரேசா: கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த கேத்தரின் மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிக் கொண்டிருந்த கேத்தரினுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு இருக்கிறது. இதை இயற்கையாக செய்யாமல் வழக்கம் போல ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்து விட்டார். இதன் விளைவாக இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. 2019 க்கு பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

Also Read:கங்கனாவே வேண்டாம்னு சொல்ல வைத்த இயக்குனர்.. நச்சுன்னு பதிலடி கொடுத்த சம்பவம்

ரைசா வில்சன்: விஐபி 2 படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த ரைசா பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் கன்னங்களை மெருகேற்றுவதற்காக கண்ணுக்கு அடியில் ஊசி போடும் சிகிச்சையை மேற்கொண்டார். இந்த சிகிச்சை அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் முகம் முழுக்க வீங்கி, இரத்த காயம் ஏற்படும் அளவுக்கு சென்று விட்டது.

ஓவியா: ஹீரோயினுக்கான எல்லா தகுதியும் இருந்தும் ஓவியா சினிமாவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் தோற்றுப் போனவர். ஆரம்ப காலத்தில் ஏனோதானோ என்று நடித்துக் கொண்டிருந்த ஓவியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய வரவேற்பு இருந்தது. அந்த வரவேற்பை புரிந்து கொள்ளாமல் அவர் சரியாக பட வாய்ப்புகளை பயன்படுத்தாமல் விட்டுவிட்டார். இது போதாது என்று உதட்டு சர்ஜரி வேறு செய்து கொண்டு முகத்தை மாற்றி இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டார்.

மியா ஜார்ஜ்: அமர காவியம், இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து போன்ற நல்ல கேரக்டர்கள் நிறைந்த படங்கள் மியா ஜார்ஜூக்கு கிடைக்கத் தொடங்கியது. இவருடைய உடல் அமைப்பு இளம் ஹீரோக்களுக்கு ஜோடி சேரும் வகையில் இருக்காது என்பது கணிசமான உண்மை தான். இருந்தாலும் தேவை இல்லாமல் ரிஸ்க் எடுத்து உடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்து கொண்டார். ஆனால் மியா ஜார்ஜ் உடல் எடையை குறைத்த பிறகு அவருக்கு சுத்தமாக பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

Also Read:ஹாலிவுட் லெவலுக்கு கவர்ச்சி காட்டிய 5 நடிகைகள்.. தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் ராஷ்மிகா