ஒரு பாட்டுக்கு கோடிகளில் குளித்த 5 நடிகைகள்.. ஐட்டம் டான்ஸ்கே அழைக்கப்படும் தமன்னா

Tamannah: இன்றைய காலகட்டத்தில் நல்லா நடிச்சாலே நாலு காசு பார்க்க முடியாது என்ற நிலைமை தான் சினிமாவில் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது தங்களுடைய வசீகரமான அழகு மற்றும் தாராளமான கவர்ச்சியின் மூலம் இரண்டு நாட்கள் கால் சீட் கொடுத்து ஒரே பாட்டுக்கு வந்து கோடி கணக்கில் இந்த ஐந்து நடிகைகள் சம்பளம் வாங்கி இருக்கிறார்கள்.

சமந்தா: அழகு மட்டும் இல்லாமல் சிறந்த நடிப்பின் மூலமாகவும் தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் கைவசம் வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இவர் சற்றும் யோசிக்காமல் புஷ்பா படத்தில் தாராள கவர்ச்சியுடன் நடனம் ஆடினார். ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு ஆடுவதற்கு அவர் வாங்கிய சம்பளம் 5 கோடியாகும்.

தமன்னா: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த தமன்னாவுக்கு சில வருடங்களாக பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. அதை தொடர்ந்து தமிழில் தலை காட்டாமல் இருந்த இவர் ஜெயிலர் படத்தில் வந்த காவாலா பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். அதை தொடர்ந்து இவருக்கு நிறைய ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகள் கிடைக்கிறது. இந்த பாடலுக்கு அவர் ஆட வாங்கிய சம்பளம் 3 கோடி.

நயன்தாரா: ஐயா மற்றும் சந்திரமுகி போன்ற படங்களில் ஹோம்லி லுக்கில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் பல்லேலக்கா பாடலுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். மேலும் அந்த சமயத்தில் உடல் எடையை நன்றாக குறைத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார் என்று கூட சொல்லலாம். இவர் அந்த பாடலுக்கு ஆட வாங்கிய சம்பளம் ரெண்டு கோடி.

ரம்யா கிருஷ்ணன்: ரம்யா கிருஷ்ணனை பன்முகத் திறமை கொண்ட நடிகை என்று கூட சொல்லலாம். இவர் அம்மன் வேஷம் போட்டு அமர்ந்தால் படம் பார்ப்பவர்கள் கூட அருள் வந்து ஆடி விடுவார்கள். அதே நேரத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுவதிலும் கில்லாடி. சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த காக்க காக்க படத்தில் இவர் தூது வருமா என்னும் பாடலுக்கு ஆடியிருந்தார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ஒரு கோடி.

சிம்ரன்: நடிகை சிம்ரன் முன்னணி ஹீரோயினாக இருந்த காலத்திலேயே அவ்வப்போது இது போன்ற ஐட்டம் டான்ஸ்களுக்கு ஆடி ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார். ராஜூ சுந்தரம் மாஸ்டர் உடன் இவர் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தானா இன்று வரை பலரது ஃபேவரிட் ஆக இருக்கிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த ஜோடியான விஜய் மற்றும் சிம்ரன் யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருப்பார்கள். இந்த ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு 20 வருடத்திற்கு முன்பே சிம்ரன் ஒரு கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.