நைஸ்சா பேசி முதல் மனைவியின் சம்மதத்தோடு மறுமணம் செய்த 5 நடிகர்கள்.. மச்சினிச்சியும் கட்டி கிட்ட கார்த்தி

பொதுவாகவே சினிமாவில் உள்ள பிரபலங்கள் செய்யும் எல்லா விஷயங்களும் அப்பட்டமாக மக்களுக்கு தெரிய வரும். அதிலும் அவர்களுடைய திருமணம் பற்றிய தகவல்கள் அவர்களே பப்ளிசிட்டி செய்து வருவார்கள். அப்படி அவர்கள் கொஞ்சம் வருடங்கள் வாழ்ந்த பிறகு இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை காரணமாக முதல் மனைவியிடம் நைசாக பேசி உஷார் செய்து அவர்களின் சம்மதத்துடனே மறு திருமணம் செய்து கொண்டார்கள். அப்படி எந்த நடிகர்கள் மறு திருமணம் செய்தார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

விஜயகுமார்: இவர் முத்துக்கண்ணு வேளாளர் என்பவரை 1969இல் திருமணம் செய்து கொண்டார். பிறகு கொஞ்ச நாளிலே இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சுளா மீது காதல் ஏற்பட்டதால் முதல் மனைவியின் சம்மதத்தோடு நடிகை மஞ்சுளாவை மறுமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 1976 இல் நடைபெற்றது. இவருக்கு ஐந்து மகளும் ஒரு மகனும் உள்ளனர். பிறகு இவரது மனைவி மஞ்சுளா 2013இல் உயிரிழந்தார். அதனால் நடிகர் விஜயகுமார் தனியாக வாழ விருப்பம் இல்லாததால் முதல் மனைவி முத்துக்கண்ணு மற்றும் பிள்ளைகளுடனும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

Also read: காடுகளை மையமாகக் கொண்டு வெற்றி கண்ட 6 படங்கள்.. வேறு பரிமாணத்தில் அசத்திய கோவை சரளா

கமலஹாசன்: இவர் வாணி கணபதி என்பவரை 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. அதன்பின் இவருடைய மனைவி நடிப்பதை நிறுத்திவிட்டு கமலஹாசனுக்கு காஸ்டியூம் டிசைனராக பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். இவரோடு கல்யாண வாழ்க்கை பத்து வருடங்களாக இனிதாக அமைந்த நிலையில் நடிகை சரிதாவின் மேல் ஆசை ஏற்பட்டதால் முதல் மனைவியிடம் சொல்லி அவர் மறு திருமணம் செய்து கொண்டார்.

டைகர் பிரபாகர்: 80 முதல் 90களில் தென்னிந்தியாவில் பல வெற்றிப் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார். இவர் அல்போன்சா மேரி என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகன்கள் உள்ளனர். அதன் பின் இவருடைய முதல் மனைவியின் சம்மதத்தின் மூலம் இரண்டாவதாக ஜெயமாலா என்பவரை மறுமணம் செய்தார். அதன் பின் நடிகை அஞ்சு மீது காதல் ஏற்பட்டதால் இரண்டாவது மனைவி சம்மதத்துடன் மூன்றாவது முறையாக மறுதிருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் முடிந்து ஒரு வருட காலங்களில் இவர்களுக்கு சண்டை ஏற்படுத்தால் இவர்களும் பிரிந்து விட்டார்கள்.

Also read: தொடர் பிளாப்பால் 3 ஹீரோக்கள் ஒதுக்கிய கதை.. வான்டட்டாக தலையை கொடுத்த ஜெயம் ரவி

ரஞ்சித்: இவர் நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2014 இல் விவாகரத்து ஆனது. அதன் பின் நடிகை ராகசுதாவை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுடைய உறவும் நீண்ட காலம் நீடிக்க வில்லை அதனால் மறுபடியும் விவாகரத்து ஆனது. அதன் பின் தனிமையில் இருக்க முடியாது ரஞ்சித் மீண்டும் நடிகை பிரியா ராமன் உடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

கார்த்திக்: 80,90களில் சினிமாவிற்கு நுழைந்து அதன் பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து தன்னுடைய வசீகரா பேச்சால் எல்லாரும் மனதிலும் இடம் பிடித்தார். இவர் 1988 இல் முதல் மனைவி ராகினியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் 1992 இல் அவரது மச்சினிச்சியும் சேர்த்து ரதி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அக்கா தங்கையுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு மொத்தம் மூன்று மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை இவரது இரு மனைவியும் ஒன்றாக எங்கேயும் அவர் பொது இடங்களுக்கு கூட்டிட்டு வந்ததே இல்லை. அத்துடன் இதுவரை ஏன் அவரது மச்சினிச்சியும் சேர்த்து கட்டிக்கிட்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Also read: 2வது மனைவியாக கழுத்து நீட்டிய 5 நடிகைகள்.. அந்தரங்க உறவால் முறிந்த விஷ்ணு விஷால் திருமணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்