வயசுக்கு தகுந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் 5 நடிகர்கள்.. இன்றுவரை ரஜினியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள்

ஒரு காலத்தில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்த நடிகர்கள் சில வருடங்களுக்கு பிறகு தங்கள் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் எத்தனையோ நடிகர்கள் ஹீரோவாக இருந்து இப்போது வில்லன், குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி மட்டும் இன்னும் ஹீரோயின்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். அதை மட்டும்தான் ரசிகர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் வயதுக்கு தகுந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் ஐந்து நடிகர்கள் பற்றி இங்கு காண்போம்.

Also read: இதுவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாத 4 வில்லன்கள்.. என்ன மிரட்னாலும் சிரிப்பு தான் வருது

அமிதாப் பச்சன் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். பல வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய வயதுக்கு தகுந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த கேரக்டர்கள் அனைத்தும் அவருக்கு வெற்றியை கொடுத்து வருகிறது.

கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு வரை கமல் ஹீரோயின்களுடன் டூயட் பாடி நடித்து வந்தார். ஆனால் தற்போது அவர் தன் வயதுக்கு தகுந்த கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடி கிடையாது. மகன், பேரப்பிள்ளை போன்ற கேரக்டர்கள் இருந்தாலும் கமல் அந்த படத்தில் மாஸ் காட்டி இருந்தார். இதுவே அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Also read: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹீரோவுக்கு வலைவீசிய தனுஷ்.. சினிமாவிலும் நீயா நானா போட்டு பார்த்துருலாம்!

சத்யராஜ் 80 காலகட்ட சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ், லவ் டுடே போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

பிரபு பல வருடங்களாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த பிரபு தற்போது அப்பா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவருடைய மகன் தற்போது ஹீரோவாக மாறிய நிலையில் இவர் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை இப்போது தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அமீர்கான் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான் தற்போது ஹீரோவாக மட்டுமல்லாமல் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அது அவருக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி விடுகிறது. அதனாலேயே அவர் தன் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Also read: கமல் தனக்கே உரிய காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. எப்போதுமே ரசிக்கும்படி செய்த தெனாலி

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -