மறக்கமுடியாத கதாபாத்திரத்தை தவறவிட்ட 5 நடிகர்கள்.. தனுஷின் வெற்றி படத்தை இழந்த சிம்பு

சினிமாவை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும் போதே அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு சில நேரங்களில் நடிகர்களுக்கு வந்த வாய்ப்பை ஏதோ ஒரு காரணம் கருதி மறுத்தால், அதன் பின்பு வேறு ஒரு நடிகர் அந்த படத்தில் நடித்து படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. இதை நினைத்து தவறவிட்ட நடிகர்கள் வருந்துவதும் உண்டு. அந்த வரிசையில் முக்கியமான கதாபாத்திரத்தை தவறவிட்ட 5 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

மகேஷ் பாபு : மகேஷ் பாபுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் மகேஷ்பாபு தான் தேர்வானார். அதன் பின்பு ஒரு சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

மோகன்லால் : மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் மோகன்லால். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஏதோ ஒரு காரணம் கருதி அவர் இப்படத்தை மறுத்ததால் அதன் பிறகு சத்யராஜ் நடித்திருந்தார். கட்டப்பா கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் மேலும் மெருகேற்றி இருந்தார்.

அசோக் செல்வன் : சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அசோக் செல்வன். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மனிதன் படத்தில் முதலில் அசோக் செல்வன் தான் ஒப்பந்தமாகியிருந்தார். அதன் பின்பு ஏதோ ஒரு காரணத்தினால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார்.

சிம்பு : சிம்புவின் திரைவாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் ஒரு ஹிட் படம் கொடுப்பதற்காக தவித்து வந்தார். அப்போது வெற்றிமாறனின் வட சென்னை படம் சிம்புவை நாடி வந்துள்ளது. ஆனால் சிம்பு துரதிஷ்டவசமாக இந்த படத்தை இழந்துள்ளார். அதன் பிறகு தனுஷ் இப்படத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் சேர்ந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அப்போது சிவகார்த்திகேயன் பல படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தின் வாய்ப்பை நழுவவிட்டார்.

- Advertisement -