சாக்லேட் பாயாக இருந்தாலும் கண்ணியம் தவறாத 5 நடிகர்கள்.. எந்த கிசுகிசுலையும் மாட்டாத அருண் விஜய்

5 Chocolate boy actors: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்கள் ரசிகர்களை வசியம் பண்ணும் அளவிற்கு ஹேண்ட்ஸம் லுக் உடன் சொக்க வைத்து இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் நடித்த காதல் ரொமான்டிக் படங்கள் என்றால் விரும்பி பார்க்கும் அளவிற்கு சில படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி அழகாக இருந்தாலும் அவர்கள் எந்த கிசுகிசுலையும் மாட்டாமல் கண்ணியமாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சாக்லேட் பாய் நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

வினித்: தமிழில் ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் சக்கரை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஜென்டில்மேன், ஜாதிமல்லி, மே மாதம், சக்தி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி போன்ற படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். அப்படிப்பட்ட இவரை பார்க்கும் பொழுது ஆர்ப்பாட்டமே இல்லாத நடிகராக கொள்ளை அழகுடன் இளசுகளை கவர்ந்திருக்கிறார்.

மாதவன்: இவர் ஆரம்பத்தில் நடித்த படங்களான அலைபாயுதே, என்னவளே, மின்னலே, டும் டும் டும், ரன் போன்ற அனைத்து படங்களும் காதல் மற்றும் ரொமாண்டிக் ஹீரோவாக இளசுகளின் மனதை கொள்ளையடிக்க வைத்தது. அதுவும் இவர் காதல் ப்ரபோஸ் பண்ணும் விதம்தான் இப்பொழுது வரை பல இளைஞர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆனாலும் இவர் மீது இதுவரை எந்தவித கிசுகிசுவும் வெளிவந்தது இல்லை. அந்த அளவிற்கு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி அக்மார்க் ஹீரோ என்று முத்திரை பதித்திருக்கிறார்.

Also read: கூடா நட்பால் சீரழிந்த இளம் இயக்குனர்.. தேடி போய் படம் பண்ணி தூக்கி விட்ட அருண் விஜய்

அருண் விஜய்: சிரித்தல் கன்னத்தில் குழி விழும் அழகும், பேசினால் கண்ணிமைக்காமல் பார்க்கும் அளவிற்கு ஹேண்ட்ஸம் ஹீரோவாக ஜொலித்திருக்கிறார். அதுவும் இவர் முக்கால்வாசி நடித்த படங்கள் அனைத்துமே காதல் சம்பந்தப்பட்ட படங்கள் தான். அந்த வகையில் இவரை ஒரு காதல் ஹீரோ என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் மீது இப்பொழுது வரை எந்தவித கிசுகிசுமே வந்ததில்லை. அந்த அளவிற்கு ஒரு கண்ணியமான ஹீரோவாக இருக்கிறார்.

அரவிந்த்சாமி: மாப்பிள்ளை யார் மாதிரி வேண்டுமென்று கேட்டால் அரவிந்த்சாமி மாதிரி தான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு கொள்ள அழகுடன் வசீகரமான தோற்றத்துடன் இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த சமயத்தில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார். பெண் ரசிகர்கள் அவ்வளவு இருந்தாலும் அதை பெருசாக அலட்டிக்காமல் கமுக்கமாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

ஷாம்: வசியம் பண்ணும் அளவிற்கு கண்ணாலேயே பேசி கவரக்கூடிய ஹீரோவாக ஜொலித்தார். 12B படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து காதல் படங்களை நடித்து வந்தார். ஆனாலும் இவருக்கு பெருசாக பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாதுதால் இடைப்பட்ட காலத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மறுபடியும் ரீ என்டரி கொடுக்கும் விதமாக வாரிசு படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு படத்தில் நடித்த வருகிறார்.

Also read: வெறிபிடித்த சிங்கமாக வேட்டையாடும் அருண் விஜய்.. மிரட்டும் பாலாவின் வணங்கான் டீசர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்