மேடையில் எல்லை மீறி பேசிய 5 நடிகர்கள்.. மன்சூருக்கு வந்தா ரத்தம் இவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.?

Actor Mansoor Alikhan: நான் அப்படி என்ன பண்ணிட்டேன் என்று மன்சூர் அலிகான் நொந்து போகும் அளவுக்கு அவரை எல்லோரும் வச்சு செய்து வருகின்றனர். த்ரிஷாவை பற்றி அவர் கூறிய ஒரு கருத்து இப்போது இந்திய அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது. அதனாலயே மன்சூர் இப்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங் பிரபலமாக மாறி இருக்கிறார்.

இத்தனைக்கும் இந்த விவகாரம் குறித்து அவர் தன்னிலை விளக்கமும் கொடுத்தார். ஆனால் வாய் துடுக்காக சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்லாமல் போனதாலேயே இப்போது அது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பல பிரபலங்கள் டாப் ஹீரோக்கள் என்றால் மட்டும் அமைதி காப்பது ஏனோ தெரியவில்லை.

அந்த வகையில் மேடையில் எல்லை மீறி பேசிய ஐந்து பிரபலங்களும் இருக்கின்றனர். அதில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின்போது தலைவர் தமன்னா குறித்து ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார். அதாவது காவாலா பாடல் சூட் செய்தபோது தமன்னாவிடம் ஒரு ரெண்டு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறியிருந்தார்.

Also read: விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்

அதேபோன்று சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் போலோ சங்கர் படத்தில் நடித்திருந்தார். அந்த விழாவில் சிரஞ்சீவி, கீர்த்தி என்னை அண்ணா என்று அழைத்தது பிடிக்கவில்லை. அடுத்த படத்தில் அவர்தான் ஹீரோயினாக வேண்டும் என்று கூறியிருந்தார். அதை அடுத்து ராதாரவி மேடையில் நயன்தாரா குறித்து படுமோசமாக பேசியிருந்தார்.

மேலும் ரோபோ சங்கர் ஒரு மேடையில் ஹன்சிகா பற்றி முகம் சுளிக்கும் வகையில் பேசி இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது நகைச்சுவை தான் என்று சப்பை கட்டு காட்டினார். அதேபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் மேடையில் தன்னுடன் நடித்த ஹீரோயின்களை கிண்டலாக பேசியிருக்கிறார்.

ஆனால் இதையெல்லாம் நடிகர் சங்கமோ, மகளிர் ஆணையமோ தட்டி கேட்கவில்லை. இப்போது மன்சூர் அலிகான் சர்ச்சைக்கு மட்டும் போர்க்கொடி தூக்குகின்றனர். அப்படி பார்த்தால் அவருக்கு வந்தா மட்டும் ரத்தம் டாப் ஹீரோக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

Also read: த்ரிஷாவுக்காக வரிஞ்சு கட்டிட்டு வந்த 4 பிரபலங்கள்.. திருமணத்திற்கு முன்பே உறவு, துவைத்து காய போட்ட நெட்டிசன்கள்