90களில் சம்பளத்தில் போட்டி போட்டு மோதிய 5 நடிகர்கள்.. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கோடி வாங்கிய ஹீரோ

தற்போது சினிமா உலகமே வேற மாதிரி இயங்கிக் கொண்டு வருகிறது. உதாரணமாக ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்து இருக்கிறது. அதனாலேயே அவர்களுடைய மவுசு அதிகரித்து விட்டது. ஆனால் இதற்கு முன்னதாக உள்ள 90ஸ் காலத்தில் பெரிய நடிகர்களின் சம்பளமே லட்சத்தில் மட்டும் தான் இருக்கும். அதிலேயே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்த வருவார்கள். அந்த மாதிரி நீயா நானா என்று வந்த நடிகர்களையும் அவர்களுடைய சம்பளத்தை பற்றியும் பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: இவர் 80, 90களில் சினிமாவிற்கு என்டரி ஆனதிலிருந்து இவரை சூழ்ந்து பல ரசிகர்கள் பாலோ செய்து இவரை தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். அப்போதைய காலத்தில் இவருடைய சம்பளம் 60 லட்சத்தை பெற்று மூன்றாவது இடத்தில் இருந்திருக்கிறார்.

Also read: கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

கமலஹாசன்: இவர் 80, 90களில் வித்தியாசமான படங்களை கொடுத்து உலக நாயகன் என்ற பட்டத்தை வென்று விட்டார். அப்பொழுது இவர் வாங்கிய சம்பளம் 30 லட்சம். ஆனால் தற்போது அதிக சம்பளத்தை வாங்கி ஹீரோவாக முன்னிலையில் நடித்து வருகிறார்.

விஜயகாந்த்: இவர் பேரை சொன்னாலே அனைவரும் இவரை பற்றி புகழாரம் சூடிக்கொண்டே வருவார்கள். இவரை தலைவராகவும் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலம் இருந்தது. இவர் படங்களில் இருக்கும் யதார்த்தத்தையும், இவருடைய நேர்மையான குணமும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. இவர் அந்த காலத்தில் ஹீரோவாக நடிக்கும் போது சம்பளம் 20 லட்சம் ஆக இருந்தது.

அமிதாப்பச்சன்: பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார் ஆக இருந்தவர் தான் அமிதாபச்சன். இவர் ஹீரோவாக நடித்த அந்த காலத்தில் இவருடைய சம்பளம் 85 லட்சமாக உயர்ந்து இரண்டாவது இடத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார்.

Also read: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சிரஞ்சீவி: இவர் தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர். இவர் 90களில் ஹீரோவாக நடிக்கும் பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமலுடன் போட்டி போட்டுக் கொண்டு இவருடைய படங்களை வெளியிட்டு வருவார். அந்த நேரத்தில் இவருக்கு அங்கே மவுஸ் அதிகரித்துவிட்டது. அதனாலேயே சம்பளம் ஒரு கோடி வாங்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

இவர்களில் போட்டி போட்டுக் கொண்டு என்னதான் சிரஞ்சீவி ஒரு கோடி சம்பளம் முதலில் வாங்கி இருந்தாலும் தற்போது கமலஹாசன் மற்றும் ரஜினி 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களில் இந்தியாவில் இவர்கள் மட்டுமே. அதிலும் கதாநாயகனாக தற்போது வரை நடிக்கும் நடிகர்கள் என்ற பெருமை இவர்களையே சாரும்.

Also read: நெல்சனின் ராஜதந்திரத்தை தவிடு பொடியாக்கிய ஐஸ்வர்யா.. நிலைகுலைந்து போன ரஜினிகாந்த்