40 வயதில் ஹீரோவான 5 நடிகர்கள்.. எம்ஜிஆரை தூக்கி சாப்பிட்ட எலும்பு கடி மன்னன்

சினிமா துறையில் இளம் வயதிலேயே நடிகர்கள் தங்களின் நடிப்பிற்கான பயணத்தை தொடங்கி விடுகின்றனர். ஆனாலும் ஒரு சில நடிகர்கள் காலம் கடந்த பிறகே தங்களின் படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோக்களாக ஜொலித்துள்ளனர். அதிலும் எம்ஜிஆரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு எலும்பு கடி மன்னனாக பிரபலமான நடிகர் தனது முரட்டுத்தனமான வயதில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படியாக வயது முத்தின பின் சினிமா துறையில் ஜொலித்த 5 நடிகர்களை இங்கு காணலாம்.

எஸ் ஜே சூர்யா: இயக்குனராக தனது முதல் படத்திலேயே வெற்றி கண்டவர் தான் எஸ் ஜே சூர்யா. இதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலும் இவர் 36 வயதிற்குப் பிறகே தனது திரைப்பயணத்தில் வெற்றி கண்டார். மேலும் நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி போன்ற படங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.  

Also Read: எஸ் ஜே சூர்யா இயக்கிய 5 திரைப்படங்கள்.. இதுல 2 மாஸ் ஹீரோ இருக்காங்க

ஆர் கே சுரேஷ்: இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்து பிரபலமானவர்தான் ஆர் கே சுரேஷ். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதிலும் இவர் தனது 38 வயதிற்குப் பிறகே ஹீரோவாக தடம் பதித்தார். மேலும்  2018 ஆம் ஆண்டு வெளியான பில்லா பாண்டி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் மாஸ் காட்டி வருகிறார். 

ஜேகே ரித்தீஷ்: இயக்குனர் சின்னி ஜெயந்த் இயக்கத்தில் வெளிவந்த கானல் நீர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதிலும் இவர் தனது 35 வயதிற்குப் பிறகே சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும்  ஆர் கே பாலாஜி நடிப்பில் வெளியான எல் கே ஜி படத்தில் அரசியல்வாதியாக நடித்து மிகவும் பிரபலமானார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜேகே ரித்தீஷ் 2019 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Also Read: மீண்டும் சம்பவம் செய்ய காத்திருக்கும் SJ சூர்யா.. வேற லெவல் அப்டேட்

ஆர் கே ராதாகிருஷ்ணன்: 1989 ஆம் ஆண்டு வெளியான வெற்றி விழா திரைப்படத்தில் சிறு கேரக்டரில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் தனது 49 வயதிற்குப் பிறகே ஹீரோவாக அறிமுகமானார். அதிலும் 2008 ஆம் ஆண்டு வெளியான “எல்லாம் அவன் செயல்” என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து வில்லன் ரோலிலும் மிரட்டி இருப்பார்.

ராஜ்கிரண்: தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ராஜ்கிரண். அதிலும் எலும்பு கடி மன்னனாக திகழ்ந்த இவர் தனது 40 வது வயதில் தான் “என் ராசாவின் மனசிலே ” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ள ராஜ்கிரண் தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

Also Read: ஹீரோவை விட ராஜ்கிரண் பெயர் வாங்கிய 5 படங்கள்.. முத்தையாவாக பந்தாடிய கொம்பன்

- Advertisement -