தள்ளாடும் வயதிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் 5 நடிகர்கள்.. ரூட்டை மாற்றி தெறிக்க விட்ட நிழல்கள் ரவி

5 Actors Who Are Still Shining Even At Their Wobbling Age: சினிமாவில் வயது என்பதை ஒரு தடையாக கொள்ளாமல் மூத்த நடிகர்கள் பலரும் இன்று திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருப்பதை நாம் காணலாம். 

அவர்கள் தங்கள் அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு ஈடுகொடுத்து நடித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களில் சிலர் இதோ,

சந்தான பாரதி: இயக்குனர், குணச்சித்திர நடிகர், காமெடியன், வில்லன் என பல பாத்திரங்களை ஏற்று தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தடம் பதித்து வருபவர் சந்தானபாரதி. குணா, மகாநதி போன்று, இவர் இயக்கிய படங்கள் காலத்திற்கும் அழியாத புகழை தேடித் தந்துள்ளது.  சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தால் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்தார் சந்தான பாரதி.

டெல்லி கணேஷ்: எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதை சிறந்த முறையில் வடிவமைத்து தனது கதாபாத்திரத்தை பேச வைத்து விடுபவர் டெல்லி கணேஷ். 79 வயதை கடந்துள்ள  இவர், முதலில் வான் படை வீரராக இருந்து பின் தமிழ் திரை உலகுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட  300 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இன்றும் வெப் சீரிஸ்களில் நடித்து, இளம் தலைமுறையினரை வாய் அடைத்து  வைத்து வருகிறார் டெல்லி கணேஷ்.

Y.G. மகேந்திரன்: நாடகங்கள் மூலமாக தனது திரைப்பயணத்தை துவக்கிய ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 74 வயதை எட்டியுள்ள இவர், கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று அனைவரையும் சபாஷ் போட செய்திருந்தார். 

வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் காமெடியில் தெறிக்க விட்ட மேஜர் சந்திரகாந்த்

நிழல்கள் ரவி: 68 வயதை கடந்துள்ள நிழல்கள் ரவி 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இன்று வரை கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிழல்கள் ரவி எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பழகும் பண்பான மனிதர் ஆவார்.  சமீபத்தில்  சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் சந்தானம் கேங்குடன் மேஜர் சந்திரகாந்த்தாக காமெடியில் தெறிக்க விட்டார்.

சாருஹாசன்: இன்று 94 வயதை நெருங்கி உள்ள சாருஹாசன் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற  பல மொழிகளிலும் நடித்து தனது திறமையை நிரூபித்து உள்ளார். இது தவிர பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் கமலின் மூத்த சகோதரரான இந்த சாருஹாசன்.

உங்க பொழுதுபோக்கை சுவாரஸ்யப்படுத்தும் சினிமா செய்திகள்

- Advertisement -