அக்கட தேசப்படத்திற்கு ஆர்வம் காட்டி வரும் 5 நடிகர்கள்.. மொக்கை வாங்கிய பிரின்ஸ்

நடிகர்களை பொறுத்தவரை தன் திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்கும் வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். அவ்வாறு கிடைக்கும் வாய்ப்பை தவற விடாது தன் திறமையை நிலைநிறுத்திக் கொள்பவர்களே சிறந்த கலைஞர் ஆவார். அதில் தற்போதைய சினிமாவும் நவீன வளர்ச்சி பெற்று வருவதால் நடிகர்களும் சம்பளத்தை உயர்த்தி கொள்கிறார்கள்.

மேலும் சிலர் தங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் வேறு மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். திறமைக்கேற்ற ஊதியம் என்பதைப் போல தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகர்கள் சிலர் இவ்வாறு செய்து வருகின்றனர். இதுபோன்று அக்கட தேச படத்திற்கு ஆர்வம் காட்டி வரும் 5 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் காலடியில் தான் இருக்கணும்.. ஹிட்லர் ரேஞ்சுக்கு மிரட்டும் பாலா

விஜய்: சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த படம் தான் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் மற்றும் பிவிபி சினிமா மூலம் தயாரிப்பை மேற்கொண்டார் தில் ராஜு. இப்படம் விஜய்க்கு கலவையான விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் பாக்ஸ் ஆபீஸில் 310 கோடி வசூலை அள்ளித் தந்தது. இதனைக் கொண்டு விஜய் இப்படத்திற்கு 110 கோடி சம்பளத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அக்கடதேச வாய்ப்புகளை இயக்கவும் அவர் ஆலோசித்து வருகிறார்.

வாத்தி: தனுஷின் நடிப்பில் வெளிவந்த படம் தான் வாத்தி இப்படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கி தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்தது. மேலும் சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் 4 சினிமாஸ் அதன் தயாரிப்பில் இப்படம் நூறு கோடி வசூலை பெற்று தந்தது. குறிப்பாக தனுசுக்கு இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்ததால் இப்படத்திற்கு சம்பளமாக 12 கோடி பெற்றிருக்கிறார். இத்தகைய காரணத்தால் இவர் அக்கட தேச படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: அகதியாக அடையாளத்துக்கு போராடும் விஜய் சேதுபதி.. யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைவிமர்சனம்

சமுத்திரகனி: இவர் தெலுங்கில் பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் படங்கள் கிடைக்காத நேரங்களில் இவர் தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் வாத்தி படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருப்பார். இது அவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி: இவர் தமிழிலும், தெலுங்கிலும் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து அசத்தும் வல்லமை கொண்டவர். இவரின் பன்முக திறமையால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. இவர் 2021ல் தெலுங்கில் வெளிவந்த உப்பன்னா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படம் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இத்தகைய காரணத்தால் தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு விருப்பம் காட்டி வருகின்றார்.

Also Read: விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன வாரிசு.. மனவேதனையில் தவித்து வாடும் அப்பா நடிகர்

சிவகார்த்திகேயன்: படிப்படியாக தன் வளர்ச்சியை மேன்படுத்திக் கொண்ட இவர் 2022ல் வெளிவந்த பிரின்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை சுனில் நாரங், சுரேஷ் பாபு, புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பை மேற்கொண்டனர். இவர்களின் தெலுங்கு ப்ரொடக்ஷன் ஆன ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் கீழ் இப்படம் வெளிவந்தது. ஆனால் இப்படம் எதிர்மறை விமர்சனத்தை பெற்று ஃபெயிலியர் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை