மொத்த இன்ஸ்டாவையும் சுக்கு நூறாக்கிய இளைய தளபதி.. முதல் இடத்திற்கு வந்த பெரிய ஆபத்து

நடிகர் விஜய் நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். கிட்டத்தட்ட அவர் இணைந்து 24 மணி நேரத்திற்குள் 4.7 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றிருக்கிறார். விரைவில் இவர் முதல் இடத்தில் வருவார் என்று அவருடைய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவருடன் கடும் போட்டி போடும் வகையில் அதிக பாலோவர்சுடன் 5 ஹீரோக்கள் இருக்கிறார்கள்.

சிம்பு: நடிகர் சிலம்பரசன் தன்னுடைய ரீ என்ட்ரியில் தான் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை தொடங்கினார். அவர் முதல் பதிவே கிட்டத்தட்ட 30 கிலோ எடையை அவர் குறைத்த வீடியோ தான். இது ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை கிட்டத்தட்ட 170 போஸ்ட்களை பகிர்ந்து இருக்கும் சிம்பு 11.8 மில்லியன் பாலோவர்ஸோடு முதலிடத்தில் இருக்கிறார். மிக குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

Also Read:என்னதான் தளபதியா இருந்தாலும், சூப்பர்ஸ்டார் ஆகிட முடியுமா.. டைட்டில் பஞ்சாயத்தில் முற்றுப்புள்ளி வைக்காத விஜய்

விஜய் சேதுபதி: நடிகர் சிம்புவுக்கு அடுத்த இடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருக்கிறார். இவர் பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் எதையும் இதில் பதிவிட மாட்டார். பெரும்பாலும் படங்களின் அறிவிப்புகள் மற்றும் பிரமோஷன் தான் இவருடைய இன்ஸ்டாவில் இருக்கும். 772 போஸ்ட்களை பதிவிட்டு இருக்கும் விஜய் சேதுபதிக்கு மொத்தம் 6.7 மில்லியன் பாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

சூர்யா: நடிகர் சூர்யா கடந்த ஜூலை 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். தன்னுடைய காதல் மனைவி ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் பதிவாக பதிவிட்டார். சமீபத்தில் இவர் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு வருடங்களில் 40 போஸ்ட்களை பகிர்ந்து இருக்கும் நடிகர் சூர்யாவுக்கு 6.4 மில்லியன் பாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

Also Read:விஜய்யிடம் சிபாரிசுக்கு சென்ற வாரிசு நடிகை.. மார்க்கெட் இழந்ததால் பரிதவிக்கும் நிலை

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2016 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். படத்தின் பிரமோஷன் மற்றும் அறிவிப்புகளை பகிர்வதோடு அவ்வப்போது தன்னுடைய குடும்பப் புகைப்படங்களையும் பகிர்வார். கடந்த பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பகிர்ந்த புகைப்படம் மில்லியன் லைக்குகளை கடந்தது. இதுவரை 306 போஸ்ட்களை பகிர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு 5.7 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

தனுஷ்: நடிகர் தனுஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதில் முதல் போஸ்ட் ஆக தன்னுடைய வெற்றிப்படமான வட சென்னை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருந்தார். மேலும் இவர் அவ்வப்போது அவருடைய மகன்களான லிங்கா மற்றும் யாத்திரை உடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்வார். இதுவரை 122 போஸ்ட்களை பகிர்ந்து இருக்கும் இவருக்கு ஐந்து புள்ளி ஆறு மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

Also Read:அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சோக கதை.. விஜய் படத்தை நம்பி அதல பாதாளத்தில் விழுந்த மகேஷ் பாபு