நான்காவது திருமணம் முடிந்தது.. 59 வயது நடிகருடன் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த வனிதா!

சலிக்காமல் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதில் நடிகை வனிதா விஜயகுமாரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அந்த அளவிற்கு தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் படங்களில் நடித்து பிரபலமானதைவிட சர்ச்சைகள் மூலமாக தான் அதிகம் பிரபலமாகியுள்ளார்.

திருமணத்திற்குப் பின்னர் சில காலம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த வனிதா ரியாலிட்டி ஷோ மூலம் மீண்டும் திரைத்துறையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர், பிபி ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி உள்ள வனிதா பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி And.. என குறிப்பிட்டு சில ஹார்ட்டின்களையும் பறக்க விட்டுள்ளார்.

சமீபத்தில் வனிதா விஜயகுமார் S என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்டவருடன் 4வது திருமணம் செய்து கொள்வார் எனவும், அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவார் எனவும் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.

vanitha
vanitha

எனவே, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா? என கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இது கண்டிப்பாக வனிதா நடிக்கும் ஒரு புதிய படத்தின் புரமோஷன் என்றுதான் பலராலும் கருதப்பட்டு வருகிறது.

vanitha-marriage
vanitha-marriage

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -