ஹிட்டு கொடுத்தாலும் சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு போக முடியலையே.. புலம்பும் 45 வயது நடிகர்

பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் சமீபத்தில் வந்த சிவகார்த்திகேயன்(sivakarthikeyan) வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருப்பது பலருக்கும் கண்ணை உறுத்திக் கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொருவரும் கூறும் செய்தியில் இருந்தே தெரிகிறது.

போட்டியாளராக பங்கேற்று பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறி மக்கள் மனதில் இடம் பிடித்து நடிகராக களம் இறங்கி முதல் படமே வெற்றிப்படமாக கொடுத்தவர்தான் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளன. மற்றபடி வசூல் நாயகனாக திகழ்ந்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் படங்கள் பெரும்பாலும் குடும்பத்தினருடன் பார்க்கும்படி அமைந்து வருவதால் அவரது படம் வெளியாகும்போது குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி படையெடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

சிவகார்த்திகேயன் போல் நானும் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை சமீபகாலமாக விஜய் ஆண்டனிக்கு வந்துள்ளது. இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் இனிவரும் காலங்களில் சிவகார்த்திகேயன் மாதிரி படங்கள் செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தாலும் அவரை ஒரு கமர்சியல் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள இன்னும் ரசிகர்கள் தயாராக இல்லை. அவரும் ஒரு சில படங்களில் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என முயற்சி செய்தாலும் அவர் நினைத்த இடத்தை எட்ட முடியவில்லை என்ற சோகம் அவரிடம் காணப்படுகிறது.

vijay-antony-cinemapettai
vijay-antony-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்