42 வயசு ஆச்சுங்க, இப்பவும் மேட்டருக்கு கூப்பிடுறாங்க.. புலம்பும் பிரபல நடிகை

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஒருவருக்கு 42 வயதான நிலையிலும் இப்போதும் அவரை அந்த மாதிரி விஷயங்களுக்கு கூப்பிடுவதை ஓப்பனாக தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சோனா. ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் இவரை கவர்ச்சி வேடங்களுக்கே பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உடல் எடையை குறைத்து விட்டு சீரியல் மற்றும் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் சோனா. அந்த வகையில் ஒரு பிரபலமான சீரியலில் நடித்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறாராம். அந்த படத்தில் மிகவும் எமோஷலான கதாபாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதள பிரச்சனைகளையும் பேசியுள்ளார் சோனா.

சோனா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் எந்த ஒரு பதிவை வெளியிட்டாலும் அதில் குடும்பத்தை பற்றி தவறாக பேசுவது, மேலும் 42 வயதிலும் தன்னை படுக்கைக்கு அழைப்பது என தவறாக பேசி வருகின்றனர்.

வருங்காலத்தில் இது எல்லாம் மாறும் என நம்புகிறேன். அதற்கான சரியான படம் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார் சோனா. சமூக வளைதளத்தில் ரசிகர்கள் பிரபலங்களிடம் அத்துமீறுவது தொடர்கதையாகி வருகிறது.

sona-actress-cinemapettai
sona-actress-cinemapettai
- Advertisement -