பார்ட்டி பண்ணுவதில் கில்லாடியான இந்த நடிகர் பார்ப்பதற்கு அம்மாஞ்சி போல் இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் ப்ளே பாய் தான். வாரிசு நடிகரான இவரின் அப்பா எந்த பிரச்சனையிலும் சிக்காத ஒரு ஜென்டில்மேன். ஆனால் நடிகரோ அவருடைய பெயருக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
அப்படித்தான் தாராள மனது கொண்ட நடிகை ஒருவரிடம் நடிகர் தன் வேலையை காட்டி இருக்கிறார். குடிபோதையில் ஓவர் சில்மிஷம் செய்த அவரின் முகத்திரையை கிழித்த நடிகை மீடியாவில் அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்தார்.
இது நடிகரின் அப்பாவுக்கு தீராத வேதனையை கொடுத்த நிலையில் காதும் காதும் வைத்த மாதிரி அந்த நடிகையிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை ஒரு வழியாக முடித்தனர். அதன் பிறகும் கூட அடங்காத அந்த நடிகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு குடியும் கூத்துமாக பொழுதை போக்கி வந்தார்.
அந்த சமயத்தில் தான் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவரிடம் இவர் தன் வேலையை காட்டி இருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை பெரிய திரைக்கு வந்த நிலையில் நடிகரிடம் மயங்கி அவருடைய ஆசை நாயகியாகவே மாறிப்போனார்.
அதைத்தொடர்ந்து பக்கத்து மாநிலத்தில் ஒரு வீட்டை பிடித்து அந்த நடிகையை குடிவைத்த நடிகர் குடித்தனமும் நடத்தி வந்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றனர். ஆனாலும் அந்த நடிகை உடன் உள்ள உறவை அவர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
அந்த நடிகைக்கு இப்போது 40 வயது நெருங்கி விட்டது. இருந்தாலும் கல்யாணத்தைப் பற்றி யோசிக்காமல் ஒண்டிக்கட்டையாக இருக்கிறார். இப்படி ஆசை நாயகியாகவே வாழ்ந்து வரும் அவரை பற்றிய கிசுகிசு தான் இப்போது திரை உலகில் படு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.