போர் கொடி தூக்கும் 4 தெலுங்கு சினிமா குடும்பம்.. விஜய் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை

ஜனவரி 12-ம் ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் வாரிசு படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அதே சமயம் தல அஜித்தின் துணிவு படமும் வெளியாகிறது. ஆகையால் 8 வருடங்களுக்குப் பிறகு தல, தளபதி இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் கோலிவுட்டில் ஏற்கனவே பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இதேபோன்று தளபதி விஜய்யின் வாரிசு படம் தெலுங்கில் ரிலீஸ் ஆவதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால் தெலுங்கு சினிமாவில் 4 குடும்பங்கள் ஆட்சி செய்து வருகிறது. என்டிஆர், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற பெரிய சினிமா குடும்பங்கள் அங்கே இருக்கிறது.

Also Read: வெற்றிவாகை சூடுவது வாரிசா, துணிவா.. சென்சார் போர்டு விமர்சனம்

விஜய் இப்பொழுது தெலுங்கு சினிமாவில் ரொம்ப பாப்புலர் ஆக மாறி வருகிறார். அத்துடன் விஜய்யின்வீர சிம்ஹா ரெட்டி படத்தில் இயக்கிய வம்சி மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இருவருமே தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள். இப்பொழுது வாரிசு படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.

இந்த தெலுங்கு குடும்பங்கள் விஜய் வளர்ச்சிக்கு நிச்சயமாக முட்டுக்கட்டையாக இருப்பார்கள். ஏற்கனவே வேறு மொழிப் படங்களுக்கு அங்கே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏதாவது நல்ல நாளில் தெலுங்கு படம் மட்டும் தான் ரிலீசாக வேண்டும் என்று போர்க் கொடி பிடிக்கிறார்கள்.

Also Read: சிரஞ்சீவி நடித்த 4 சூப்பர் ஹிட் படங்கள்.. 47 நாட்களிலேயே எடுத்த சபதத்தை முடித்த மெகா ஸ்டார்

மேலும் வாரிசு படம் ஆந்திராவில் 6 தியேட்டர்களை ஆக்கிரமித்து இருக்கிறது. ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டாரர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா திரைப்படமும், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியாகிறது. இந்த படங்களுக்கு வாரிசு படத்தை விட குறைந்த அளவு தியேட்டர்கள்தான் கிடைத்துள்ளது.

ஏனென்றால் வால்டர் வீரய்யா திரைப்படம் 4 திரையரங்குகளிலும், வீர சிம்ஹா ரெட்டி 3 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகிறது. அதேபோல் அஜித்தின் துணிவு படம் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இருப்பினும் தெலுங்கு சினிமாவில் 4 குடும்பங்கள் டோலிவுட்டை ஆட்டிப் படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் விதத்தில் விஜய்யின் என்ட்ரி இருக்கப் போகிறது.

Also Read: திருமணத்திற்காக முன் கண்டிஷன் போட்ட நாகார்ஜுனா.. 30 வருசமா சொன்னபடியே வாழும் அமலா

- Advertisement -