நம்ம நாலு டாப் இயக்குனர்களை வளைத்து போட்ட அக்கட தேசத்து ஹீரோக்கள்.. பெத்த கல்லாவை குறி வைத்த ஷங்கர்

Director Shankar : தமிழ் சினிமாவில் சில ஹிட் படம் கொடுத்த பிரபலங்கள் அதன் பிறகு அக்கட தேச படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கு பக்கம் தமிழ் இயக்குனர்கள் சென்றுள்ளனர். அதுவும் டாப் ஹீரோக்களின் படங்கள் இயக்கி வருகிறார்கள்.

ராம்சரண்னுடன் கூட்டணி போடும் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது தமிழில் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார். கமல் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டுக்குள்ளாகவே வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 படப்பிடிப்புடன் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கி வந்தார்.

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 105 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.

பிரபாஸுடன் லோகேஷ்

பாகுபலி நடிகர் பிரபாஸுடன் லோகேஷ் கூட்டணி போட்டிருக்கும் செய்தி சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதுவும் லோகேஷ் விஜய்யின் மாஸ்டர் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே இந்த படத்திற்கான அட்வான்ஸை வாங்கி உள்ளார்.

தமிழ் படங்களை மட்டுமே இயக்கி வந்த லோகேஷ் பிரபாஸ் படத்தின் மூலம் முதல்முறையாக தெலுங்கு சினிமாவிற்கு செல்கிறார். மேலும் பிரபாஸ் கல்கி படத்தை முடித்த கையோடு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

அட்லீயின் அடுத்த சம்பவம்

வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வரும் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்திருந்தது. இதை அடுத்து இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனின் படத்தை எடுக்க உள்ளார்.

மேலும் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அன்று இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் தரணி

இயக்குனர் தரணி, தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை வைத்து 2006ம் ஆண்டு பங்காரம் என்ற படத்தை எடுத்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வசூலை செய்யாததால் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவி இருந்தது.

இப்போது நீண்ட வருடம் கழித்து மீண்டும் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் நடிகர் பவன் கல்யாணை ஹீரோவாக வைத்து எடுக்க உள்ளார்.

Next Story

- Advertisement -