இந்திய அணியை கேள்விக்குறியாக்கிய செலக்சன் கமிட்டி.. 20 ஓவர் கோப்பைக்கு வந்த சிக்கல்

இந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பைகள் ஆரம்பித்துவிட்டது. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லேண்ட் அணிகள் மோதுகிறது. போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடக்கிறது, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நேரலை செய்யப்படுகிறது.பல முக்கிய திறமையானவீரர்களை கழட்டி விட்டு இந்திய அணியில் சரியான வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான்பலரது குற்றச்சாட்டுகள்.

20 ஓவர் உலக கோப்பையில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை எடுத்ததுதான் இப்பொழுது கடும் பேசு பொருளாக மாறி உள்ளது யுஸ்வேந்திரசாகல், அக்சர் பட்டேல் ,குல்தீப் யாதவ், ஜடேஜா , என நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை எடுத்துவிட்டு பல முக்கிய அதிரடி ஆட்டக்காரர்களுக்கு டிம்மிக்கு கொடுத்துள்ளது பிசிசிஐ .இதற்கு பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சுழற் பந்துவீச்சாளர்கள் அணிக்கு தேவை என்று கூறியுள்ளார்.

நான்கு சுழற் பந்து வீச்சாளர்களை மைதானத்தில் பயன்படுத்தும் போது தான் உங்களுக்கு புரியும் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ரோகித் சர்மா.ஆனால் அமெரிக்கா மைதானங்களில் வேகப்பந்து வீச்சு தான் எடுபடும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

20 ஓவர் கோப்பைக்கு வந்த சிக்கல்

கே எல் ராகுலை 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யவே இல்லை. அது மட்டும் இன்றி ரிங்கு சிங், சுபம் இல் ஆவேஷ் கான்போன்ற வீரர்களை ரிசர்வ் வீரர்களாக தேர்ந்தெடுத்துள்ளது. கில் மற்றும் ரிங்கு சிங் இருபது ஒரு போட்டியை எளிதாக மாற்றக்கூடிய வீரர்கள். இவர்களை எடுக்காதது இந்திய அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது

இப்படி தவறாக பிசிசிஐயின் செலக்சன் கமிட்டி செயல்பட்டதால் ஏதாவது ஒரு மாற்றுவீரரை எடுக்க வேண்டும் என்றால், ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு விட்டது என்ற கணக்கில் தான் மாற்று வீரரை தேர்ந்தெடுக்க முடியும். வேகப்பந்து பலமாக இருக்கும் போது 4 சுழற் பந்து பேச்சாளர்கள் தேவையில்லை என ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர் கூறி வருகிறார்கள்.

முகமது சிராஜ், பும்ரா , ஆஸ்ப்பிரித் சிங் போன்ற பலமான வேகப்பந்து யூனிட் இருக்கிறது அதுபோக ஆள் கவுண்டர் பட்டியலில் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா இடம்பெற்று உள்ளனர். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற மைதானங்களில் ஆடுகளம் பேகைப்பந்து வீட்டுக்கு ஏதுவாக இருக்கும்.

Next Story

- Advertisement -