ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டிய 4 படங்கள்.. விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த படம்

தமிழ் சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெறக்கூடியவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.   சமீபகாலமாகவே இவரின் தனித்துவமான நடிப்பின் மூலம் தனது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அதிலும் தொடர்ந்து நான்கு படங்களில் ஒரே ஹீரோவுடன் ஜோடி போட்டதால் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி உண்டானது என்ற செய்திகள் கூட வெளிவந்தது. அப்படியாக ஐஸ்வர்யா ராஜேஷ்  ஓவர் நெருக்கம் காட்டி நடித்த 4 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

ரம்மி: இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரம்மி. இதில் விஜய் சேதுபதி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் இப்படம் ஆனது 1987 இல் நடக்கும் காதல் கதையினை மையமாக வைத்து வெளிவந்ததாகும். அதிலும் இப்படத்தில் இவர்கள் இருவரும் சிறந்த காதலர்களாகவே வலம் வந்தனர்.

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி படம் எப்படி இருக்கு?. முழு திரைவிமர்சனம்

தர்மதுரை: இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தர்மதுரை. இதில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் விஜய் சேதுபதி தர்மதுரை என்னும் கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ் அன்பு செல்வி என்னும் கேரக்டரில் கிராமத்து பெண்ணாகவும் நடித்திருப்பார். மேலும் இவர்கள் இருவரும் இப்படத்தில் ஓவராக நெருக்கம் காட்டி நடித்திருப்பார்கள்.

க/பெ  ரணசிங்கம்: இயக்குனர் பி விருமாண்டி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் க/பெ  ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது என்றே சொல்லலாம்.

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான கதைகள்.. ஆண்களுக்கு சவுக்கடி கொடுத்த கிரேட் இந்தியன் கிச்சன்

பண்ணையாரும் பத்மினியும்: இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். இதில் விஜய் சேதுபதி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரியானது நன்றாகவே ஒர்க் அவுட் ஆக இருந்தது. இதனாலேயே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டனர்.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நான்கு முறை விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் ஓவர் நெருக்கம் காட்டி நடித்துள்ளனர். இதனாலேயே இவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி உண்டாகி காதலித்து வருகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.

Also Read: ப்ளாப் ஆனாலும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியலையாம்

Next Story

- Advertisement -