வியாபாரமாகாமல் கிடப்பில் போடப்பட்ட 4 தமிழ் படங்கள்.. சிக்கலில் மாட்டிக்கொண்ட ஐசரி கணேஷ்

Producer Isari Ganesh: ஒரு படம் எடுத்து முடித்து அதை தியேட்டர் ரிலீஸ் க்கு கொண்டு வருவது என்பது பிள்ளை பெற்று, பெயர் வைப்பதற்கு சமம் என்று சொல்வார்கள். சில படங்களுக்கு எங்கிருந்து பிரச்சனை ஆரம்பிக்கும் என்றே தெரியாது, சரியாக பஞ்சாயத்தை கிளப்பி அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட வைத்து விடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இன்னும் வியாபாரமாகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் 4 படங்களை பற்றி பார்க்கலாம்.

கிடப்பில் போடப்பட்ட 4 தமிழ் படங்கள்

பிடி சார்: இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த படம் தான் பிடி சார். இந்த படத்தை டாக்டர் ஐசரி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வருடம் பொங்கல் அப்போதே வெளியானது. கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகியும் படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

சுமோ: இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், வி டிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் சுமோ. இந்த படத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமோவீரர் Yoshinori Tashiro நடித்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான பகுதி ஜப்பான் நாட்டில் தான் படமாக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட சுமோ படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த படத்தை தயாரித்ததும் ஐசரி கணேஷ் தான்.

Also Read:டிஆர்பி-யில் தெறிக்கவிடும் டாப் 5 சேனல்கள்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?

வணங்காமுடி: நடிகர் அரவிந்த்சாமி உடன் இணைந்து சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் வணங்காமுடி. இயக்குனர் செல்வா இயக்கி, திரை கதையும் எழுதி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பும் மொத்தமாக முடிந்து விட்டது. ஆனால் இந்த படத்தை மூன்று வருடங்களை கடந்தும் ரிலீஸ் செய்ய முடியாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள்.

போர்: மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து அசத்தியவர் அர்ஜுன் தாஸ். குரல் மற்றும் முகச்சாயல் மறைந்த நடிகர் ரகுவரனை இவர் நினைவுபடுத்துவதால் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வில்லன் ரோலை தாண்டி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருக்கும் படம் தான் போர். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படமும் ரிலீஸ் செய்ய காலதாமதம் ஆவது சில சிக்கல்களால் தான்.

Also Read:சந்தானம் விட்டுக் கொடுக்காத அந்த 5 காமெடியன்கள்.. முரட்டு வில்லனையும் மொக்க பண்ணும் கெட்ட பைய காளி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்