அஜித்திற்காக அடித்துக் கொள்ளும் 4 ஹிட் இயக்குனர்கள்.. இந்த ரெண்டு பேரு கன்பார்ம்

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் ஏகே 62, ஏகே 63 போன்ற படங்களை யார் இயக்குகிறார் என்ற விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்புடன் பேசப்படுகிறது. அதிலும் அஜித்தின் அடுத்தடுத்த படங்களை கைப்பற்ற வேண்டும் என நான்கு ஹீட் இயக்குனர்கள் அடித்துக் கொள்கின்றனர். இதில் இரண்டு பேர் கன்ஃபார்ம் ஆகி உள்ளனர்.

அதிலும் பல நாட்களாகவே ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் அந்தப் படத்தை இயக்கவில்லை என்பது உறுதியானது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் உடைய கதை அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காததால், தற்போது டாப் 4 இயக்குனர்கள் தான் அஜித்தின் சாய்ஸ் ஆக உள்ளதாம்.

Also Read: விக்னேஷ் சிவனை டீலில் விட்ட அஜித்.. உதயநிதி இயக்குனருடன் கைகோர்க்கும் ஏகே-62 காம்போ

இந்த போட்டியில் இயக்குனர் மகிழ் திருமேனி, விஷ்ணுவரதன்,  அட்லி,  ஏஆர் முருகதாஸ் போன்ற நான்கு இயக்குனர்கள் உள்ளனர். அதிலும் இந்த நான்கு இயக்குனர்களும் இரண்டு பேர் உறுதியாகியுள்ளனர். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான கழகத் தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62-வது படத்தை இயக்க உள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த படத்தையும் லைக்கா ப்ரொடக்சன் தான் தயாரிக்கிறது. மகிழ்த்திருமேனி அருண் விஜய்யின் தடையறத் தாக்க, தடம் மற்றும் ஆர்யாவின் மீகாமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தடம் படம் அருண் விஜய்யின் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனை ஆக அமைந்தது. இப்போது மிகக் குறுகிய காலத்திலேயே அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்புகள் மகிழ்த்திருமேனிக்கு கிடைத்துள்ளது.

Also Read: லண்டன் வரை சென்ற விக்னேஷ் சிவன்.. அஜித், லைக்காவால் அவமானப்பட்ட சம்பவம்

இவரைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லி இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளன. விஜய்க்கு தொடர் வெற்றிகளை கொடுத்த அட்லி, தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த ரேஸில் இரண்டு இயக்குனர்கள் கன்ஃபார்ம் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அஜித் பிரம்மாண்டத்தின் உச்சம் தொட வரிசை கட்டி நிற்கும் 3 இயக்குனர்கள்.. எதிர்பார்ப்பை எகிற செய்த ஏகே 63

- Advertisement -