இப்போதான் விஜய், 80-களில் ரஜினிக்கு கட்டம் கட்டிய 4 ஹீரோக்கள்.. சூப்பர் ஸ்டாரா இருக்குறது சுலபம் இல்ல

Rajinikanth – Vijay: ‘ பேர தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க 100 பேரு’ என்ற பாட்டு ரஜினியின் சினிமா கேரியரில் முக்கியமான ஒன்று. இந்தப் பாட்டு வரிகள் விஜய்க்காகத்தான் எழுதப்பட்டது என்று கிளப்பி விடப்பட்டது. ரஜினிக்கு, விஜய் போட்டியா இது எப்போதிலிருந்து என ரஜினியின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையிலிருந்து அவரை நோட் பண்ணியவர்களுக்கு சந்தேகம் வந்திருக்கும்.

இதற்கான தெளிவான பதிலை தான் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தன்னுடைய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு, கமல் தான் போட்டி கமலுக்கு ரஜினிகாந்த் போட்டி என எல்லாருக்குமே தெரியும்.

இப்போதைய சினிமா என்பது ரஜினி மற்றும் கமலுக்கு அப்பாற்பட்டு மற்ற டாப் ஹீரோக்களுக்கு நடுவே நடக்கும் போட்டி தான். இருந்தாலும் வம்படியாக இந்த ஹீரோக்களுடன் ரஜினிக்கு போட்டி இருப்பதாக ஒரு மாய பிம்பம் உருவாக்கப்படுகிறது.

இது சினிமாவில் லாபம் பார்க்க நினைக்கும் சில விஷமிகளின் வேலை தான். உண்மையிலேயே ரஜினி போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்த காலம் என்பது எண்பதுகளின் காலகட்டம் தான். இதை திருப்பூர் சுப்ரமணியமே சொல்லியிருக்கிறார்.

கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், ராஜ்கிரண் போன்றவர்களோடு போட்டி போட்டு தான் ரஜினி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இவர்களுடன் ஒரே மாதிரி ரேஸில் ஓடி வந்த ரஜினி தான் 89 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் என்னும் சிம்ம சொப்பனத்தை அடைந்திருக்கிறார்.

அதன்பின்னர் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக அந்த இடத்தை தன் கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறார். பாபா பட சமயத்தில் ரஜினி, திருப்பூர் சுப்பிரமணியத்திடம் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்து இருந்திருக்கிறார்.

ஆனால் நீங்கள் சினிமாவை விட்டு போய்விட்டால் எங்களுடைய பிழைப்பு ரொம்ப மோசமாகிவிடும் என அப்போது திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினியிடம் சொல்லி இருக்கிறார். அதேபோன்று ரஜினியின் ஒரு சில படங்கள் தோல்வி படங்கள் என்று சொல்லப்படுவதும் உண்மை இல்லை என சொல்லி இருக்கிறார்.

கரகாட்டக்காரன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் வெளியான ராஜாதி ராஜா தோல்வி அடைந்ததாக இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அந்த படம் டீசன்டான வெற்றியைத் தான் பெற்றிருக்கிறது.

அதேபோன்று தேவர்மகன் படத்துடன் ரிலீசான பாண்டியன் படம் தோல்வி படம் என்பதில் எந்தவித உண்மையும் இல்லை என திருப்பூர் சுப்பிரமணியம் சொல்லி இருக்கிறார். உண்மையாகவே ரஜினி மற்ற ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி ஓடிய காலம் என்பது எண்பதுகளின் காலகட்டம் தான். அதன்பின்னர், இன்றுவரை நிற்காத பந்தய குதிரையாக தான் ஓடி கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்