நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபக்காரர்களாக திரியும் 4 ஹீரோக்கள்.. நேர்மையாய் இருப்பதால் மூக்கு மேல டென்ஷனாகும் விஜய் சேதுபதி

சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகர்கள் ஒரு போர்வையில் தான் மறைந்து இருக்கிறார்கள். படத்தில் உள்ளவாறு நிஜத்திலும் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஹீரோக்களாக இருக்கும் சிலர் சில இடங்களில் அதிக கோபத்தை காட்டி உள்ளனர்.

அவ்வாறு தன்னையும் மீறி சந்தர்ப்ப சூழ்நிலையால் நான்கு ஹீரோக்கள் மூக்குக்கு மேல் கோபப்பட்டு இருக்கிறார்கள். அந்த ஹீரோக்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

அருண் விஜய்

செல்வாக்கு மிக்க பெரிய குடும்பத்தில் பிறந்தவர் தான் அருண் விஜய். இவர் ஒரு முறை மனைவியுடன் திரையரங்குக்கு செல்லும்போது ஒருவர் இடித்து விட்டாராம். அவரை அங்கேயே அருண் விஜய் அடித்ததாக சொல்லப்படுகிறது.

அதோடு அருண் விஜய் இடம் ஃபோட்டோ, செல்பி எடுக்க முன்பெல்லாம் அனுமதிக்கவே மாட்டாராம். படப்பிடிப்பு தளத்திலேயே கத்தி கூச்சல் இடுவாராம். இப்போது மொத்தமாக மாறி சாதுவாகிவிட்டார்.

சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து சீரியலில் நுழைந்தவர் தான் சிவகார்த்திகேயன். இவருக்கும் விஜய் டிவிக்கும் ஒரு அக்ரீமெண்ட் உடன் தான் சினிமாவுக்கு நடிக்க வந்திருக்கிறார். அதன் பின்பு விஜய் டிவியின் இழுத்த இழப்புக்கு சிவகார்த்திகேயனால் செல்ல முடியவில்லை.

இதனால் அந்த சேனல் மீது மிகுந்த கோபப்பட்டு இருக்கிறார். மேலும் அவரைப் பற்றிய நிறைய செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. இப்போது தான் உண்டு தன் வேலை உண்டு என்று சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.

விஜய் சேதுபதி

ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புக்காக பல கம்பெனிக்கு ஏறி இறங்கியவர் தான் விஜய் சேதுபதி. மேலும் தன்னுடைய படங்களுக்கு அவரே இன்வெஸ்ட்மென்ட் செய்தும் நடித்து வந்தார். அதன் பிறகு முன்னணி ஹீரோக்களின் இடத்தை பிடித்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களாக சின்ன கேரக்டர் என்று கூட பார்க்காமல் கிடைக்கும் கதாபாத்திரம் எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். பணத்திற்காக விஜய் சேதுபதி இவ்வாறு இறங்கி விட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. இப்போது அதிலிருந்து பின்வாங்கி நல்ல கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன் என வாக்கு கொடுத்துள்ளார்.

விஷால்

தாமிரபரணி, சண்டக்கோழி போன்ற படங்களில் நடித்த போது விஷாலுக்கு இருந்த மவுசே வேறு. ஆனால் இப்போது தேவையில்லாமல் வாக்குறுதியை அள்ளிக் கொடுத்து தனது பெயரை கெடுத்து கொண்டார்.

அதோடு படப்பிடிப்பிலும் சரியாக விஷால் கலந்து கொள்வதில்லை. அவருக்கு சட்டென்று கோபம் வந்து பலமுறை மீடியாக்கள் முன்பே தனது ஆத்திரத்தை காட்டி இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்