பொங்கல் ரேஸில் இருந்து வெளியே போகும் 4 படங்கள்.. இமான் பஞ்சாயத்தை தீர்க்க முடியாமல் திணறும் எஸ்கே

Upcoming Tamil Movies: திரைப் பிரியர்கள் பண்டிகையை பெரும்பாலானோர் திரையரங்கில் கொண்டாட விரும்புவார்கள். ஆகையால் அன்றைய தினத்தை குறி வைத்து டாப் நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து கல்லா கட்டுவார்கள். அதிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என சினிமா பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 4 படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி போயிருக்கு.

சியான் விக்ரம்- பா. ரஞ்சித் கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் தங்கலான். இதில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டுகிறார். இந்த படம் கேஜிஎஃப் என்கிற கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகிறது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றனர்.

தங்கலான் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் பான் இந்தியா படமாக எல்லா மொழிகளிலும் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் முடிவெடுத்துள்ளார். இது விக்ரமுக்கு பெரிய தலைவலியாயிருச்சு. இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து விடலாம் என சியான் விக்ரம் நினைத்திருந்தார், ஆனால் குடியரசு தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.

அடுத்ததாக சுந்தர் சி-யின் ஹாரர்- காமெடி ஜானரில் சீரிஸாக உருவாகிக்கொண்டிருக்கும் ‘அரண்மனை 4’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தை சுந்தர் சி-யே இயக்குகிறார். இதில் இவருடன் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. ஆனால் இந்த படத்திற்கான மொத்த வேலைகளும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிவது சந்தேகம்தான். ஆகையால் பட குழு திட்டமிட்டபடி அரண்மனை 4 பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பில்லை.

சனியன தூக்கி பனியன்ல போட்டுக்கிட்ட மாதிரி, சூர்யா கழட்டிவிட்ட வணங்கான் படத்தில் அருண் விஜய் வசமாக சிக்கிக் கொண்டார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாகவே தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நூறு சதவீதம் திருப்தி அடையாமல் பாலா மீண்டும் மீண்டும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் சிவகார்த்திகேயனின் அயலான் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்பட்டு, அதன் பின் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது அதற்கு வழி இல்லை. இந்த படத்திற்கு இன்னும் பஞ்சாயத்து முடிந்த பாடில்லை. ஏற்கனவே இமான் கொளுத்திப் போட்டதை அணைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய அயலான் படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

- Advertisement -