கமல் நடிக்க ஆசைப்பட்ட 4 படங்கள்.. மணிரத்தினத்தின் மூன்று படங்களை தவற விட்ட ரங்கராய நாயகன்

4 films that Actor Kamal failed to act in and wanted to act in: கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அசால்டாக நடித்து அசத்தி விட்டுபோவார் உலக நாயகன் கமல். ஆனால் தனக்கு வாய்த்த கதைகளில் அவர் காட்டிய தயக்கத்தினாலும் கால்ஷீட் பிரச்சினைகளினாலும் சில ஹிட் படங்கள் நடிக்க முடியாமல் போனது. அவர் நடிக்க ஆசைப்பட்டு முடியாமல் போன 4  ஹிட் படங்களை காணலாம்.

சீவலப்பேரி பாண்டி: “என் விதியை எழுதயில்ல, அந்த சாமியும் உறங்கியதே” என்று போராளியின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த திரைப்படம் சீவலப்பேரி பாண்டி. இப்படத்தின் கதையை பிரதாப் போத்தன் முதலில் கமலுக்கு கூறினாராம். கமல் நடிக்க தயக்கம் காட்டவே வாய்ப்பு நெப்போலியனுக்குச் சென்றது.

Also read: 70 வயதிலும் 30 வயது போல் இளமை மாறாமல் இருக்கும் 5 நடிகர்கள்.. செம ஃபிட்டாக இருக்கும் கமல்

சத்ரியன்: நூறு நாட்களுக்கும் மேல் ஓடி திரையில் சாதனை செய்திருந்தது விஜயகாந்தின் சத்ரியன் திரைப்படம். மணிரத்தினத்தின் திரைக்கதையில் மற்றும் தயாரிப்பில்  உருவாகிய சத்ரியன், அவரது உதவி இயக்குனராக இருந்த சுபாஷ் மூலம் படமாகியது. இந்த படத்தின் போது கமல் அவர்கள் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்க இயலாமல் போனது.

அஞ்சலி: ஆட்டிசம் தாக்கிய சிறப்பு குழந்தைகளை இந்த சமூகம் எவ்வாறு நோக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிய படம் அஞ்சலி. இதில் உணர்ச்சி பூர்வமான கிளைமாக்ஸ்க்கு அழாத கண்களே இல்லை எனலாம். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்  நடித்த ரகுவரன் மற்றும் பிரபு இருவருமே தங்களுக்குரிய பங்கை சிறப்பாக செய்திருந்தனர். இவ்வாய்ப்பை தவறவிட்டது கமலின் துரதிஷ்டமே

பம்பாய்: மும்பையில் நடைபெற்ற கலவரங்களை பின்னணியாக கொண்ட மணிரத்தினத்தின் இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, அரவிந்த்சாமி, நாசர் முதலானோர் நடித்திருந்தனர்.

மதம் ஜாதியை கடந்து காதலில் வென்ற பம்பாயின் வெற்றி அனைவரும் போற்றும் படியாக இருந்தது பல விருதுகளை வாங்கி குவித்த திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம் கமல். பல்வேறு காரணங்களால் கமல் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. கமலை போலவே இப்படத்தை மிஸ் செய்த மற்றொரு நபர் விக்ரம் ஆவார்.

Also read: நாலு கெட்டபில் மிரட்ட வரும் ரங்கராய நாயக்கன்.. மணிரத்தினத்தை நிம்மதி பெருமூச்சு விட வைத்த கமல்