ரக்சனை தொடர்ந்து சீசன்6ல் களமிறங்கும் 4 போட்டியாளர்கள்.. வைரலாகும் பிக்பாஸ் அப்டேட்

விஜய் டிவியில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ், 6-வது சீசனை வரும் அக்டோபர்2-ம் தேதி கோலாகலமாக தொடங்கப் போகிறது. 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன், 6-வது சீசனையும் தொகுத்து வழங்கப் போகிறார்.

இந்நிலையில் இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்கின்றார்கள் என்பது குறித்த தகவல்கள் சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் 5 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரக்சன்: விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் VJ ரக்சன். இந்த நிகழ்ச்சியை ரக்சன் காமெடியாக கொண்டு சென்றதால் பலரது மனதை கவர்ந்திருக்கிறார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் 2-வது கதாநாயகனாக நடித்திருப்பார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் யாராவது ஒருவர் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இதுவரை கவின், ரியோ, பிரியங்கா, ராஜூ ஜெயமோகன் இவர்களை போலவே பிக் பாஸ் சீசன்6ல் ரக்சன் கலந்து கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளார்.

ராஜலட்சுமி: கிராமிய பாடகியாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டாப் 10 போட்டியாளராக மாறினார். அதே சீசனில் ராஜலட்சுமியின் கணவர் செந்திலும் கலந்துகொண்டு, அவர் தான் அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார்.

இதுவரை பிக்பாஸில் நடந்துமுடிந்த மற்ற சீசன்களில் கிராமப் பெண் யாரையாவது ஒருவரை பங்கேற்க வைத்து அங்கிருக்கும் மாடல்களின் உடை, பழக்கவழக்கத்தை விமர்சித்து வம்பு கட்டி விடுவதுதான் பிக் பாஸ் ஸ்டேட்டஜி.

அப்படிதான் நடந்து முடிந்த சீசன்களில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, நாடக கலைஞர் தாமரைச்செல்வி இவர்களைத் தொடர்ந்து நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார்.

இவர் பல சினிமா பாடல்களை பாடினாலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சாமி பாடலைப் பாடி பிரபலமானவர். இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால் நிச்சயம் என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கார்த்திக் குமார்:  2000 ஆண்டில் அலைபாயுதே படத்தில் ஷியாம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர், அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு பொய் சொல்ல போறோம் திரைப்படத்தில் உப்பிலி நாதன் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக பிரமாதமாக நடித்திருப்பார்.

இதன் பிறகு வரிசையாக பல படங்களை நடித்தாலும் சினிமாவில் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால் பிக்பாஸில் நுழைந்து பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் கலந்து கொள்ள போகிறார். இவர் சமீபத்தில் வெளியான மாதவனின் ராக்கெட்ரி திரைப் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அஜய் மெல்வின்: இவர் பிரபல மாடலாக பணிபுரிகிறார். கோல்கேட்(Colgate), இனோ(Eno) உள்ளிட்ட விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான கவின் உடன் இணைந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸ்யிலும் அஜய் மெல்டிங் நடித்திருக்கிறார். மேலும் தி பிரேக் அப்( the break up) என்ற குறும் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இன்னிலையில் பட வாய்ப்புகளை சினிமாவில் பெற வேண்டும் என்பதற்காக, அஜய் மெல்வின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளார். நடந்து முடிந்த மற்ற சீசன்களில் பாலாஜி முருகதாஸ், நிரூப் போன்ற மாடல்கள் கலந்து கொண்டு பிரபலமானது போல், அதே ஆசையில் அஜய் மெல்வின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்

அஜ்மல் அமீர்: இவர் தமிழ், மலையாள திரைப்படங்களில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர வேடங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இருப்பினும் அஜ்மல் அமீர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பதற்கு தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகாவது சினிமாவில் எதிர்பார்த்த நிலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதில் கலந்து கொள்ள உள்ளார்.

இவ்வாறு விரைவில் துவங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது வரை 5 போட்டியாளர்கள் உறுதியான நிலையில், இன்னும் சிலரிடம் பிக்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருப்பதால் இனி வரும் நாட்களில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் மொத்தம் லிஸ்ட்டும் வெளியாகும்.

அதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் மற்ற சீசன்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாக இந்த சீசன் இருக்கவேண்டும் என்பதற்காக விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளரும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறது.

bb-contestants-cinemapettai
bb-contestants-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்