நவரச நாயகன் மீது கிரஷில் இருந்த 4 நடிகைகள்.. சாமியாருக்கு முன்பு கருப்பழகி போட்ட தூண்டில்

ஹீரோக்களை பார்த்து ரசிகைகள் மயங்குவதைப் போலவே, கூட நடிக்கும் நடிகைகளும் செம கிரஸ்ஸில் இருந்திருக்கின்றனர். அதுவும் நவரச நாயகனின் மீது செம கிரஷில் 4 நடிகைகள் இருந்திருக்கின்றனர். அதிலும் சாமியாருக்கு முன்பே கருப்பழகி நடிகை, கார்த்திக்குக்கு காதல் வலை விரித்து இருக்கிறார்.

குஷ்பூ: சுயம்வரம், வருஷம் 16, இது நம்ம பூமி, காத்திருக்க நேரமில்லை என வரிசையாக 90-களில் குஷ்பூ- நவரச நாயகன் கார்த்திக் உடன் ஜோடி போட்டார். அதிலும் வருஷம் 16, நம்ம பூமி போன்ற படங்களில் இருவரும் ரொமான்ஸில் பட்டையைக் கிளப்பினர். கார்த்திக்கின் வசீகர பேச்சு மற்றும் அழகில் மயங்கி அவரை காதலித்து எப்படியாவது வளைத்து போட பார்த்தார், ஆனா முடியல.

ரம்பா: உள்ளத்தை அள்ளித்தா, சுயம்வரம், உனக்காக எல்லாம் உனக்காக, அழகான நாட்கள் போன்ற படங்களில் நவரச நாயகன் கார்த்திக்குக்கு ஜோடியாக ரம்பா நடித்தார். இந்த படங்களில் கார்த்திக் உடன் ரம்பா கொஞ்சம் ஓவராகவே நெருக்கம் காட்டி நடித்தார். இதற்கு காரணம் ரம்பாவிற்கு கார்த்திக் மீது தனி ஈர்ப்பே இருந்தது.

Also Read: ரீ-என்ட்ரியை தவறவிட்ட 5 ஹீரோக்கள்.. போர்தொழிலோடு வாழ்க்கையை முடித்துக் கொண்ட ரஜினியின் நண்பன்

கார்த்திக் மீது கிரஷில் இருந்த 4 நடிகைகள்

ராதா: 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியான ராதா, திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக்கும் ராதாவும் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தான் ஜோடியாக நடித்து அறிமுகமானார்கள். இதில் விச்சுவாக கார்த்திகையும், மேரியான ராதாவையும் திரையில் பார்க்கும்போது நிஜ காதலர்கள் போலவே தெரியும்.

இந்த படத்திற்கு பிறகு கார்த்திக்- ராதா ஜோடி வாலிபமே வா வா, அபூர்வ சகோதரிகள், நல்ல தம்பி, அதிசய பிறவிகள், உறங்காத நினைவுகள், இளம் ஜோடிகள், நேரம் வந்தாச்சு, பக்கத்து வீட்டு ராஜா என அடுத்தடுத்து பல படங்களில் இணைந்து நடித்தனர். இதனால் ராதாவிற்கு கார்த்திக் மீது கிரஷ் ஏற்பட்டு அவர் மீது பைத்தியமாவே இருந்தார்.

ரஞ்சிதா: நடிகை ரஞ்சிதாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. இப்போது அவர் தான் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராம். இவர் பலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் நித்யானந்தாவின் ஆசை நாயகியாக அவருடன் சேர்ந்து கூத்தடித்து, நடிகையாக சேர்த்து வைத்திருந்த மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார்.

90களில் கருப்ப அழகியான ரஞ்சிதா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து இளசுகளை வசியம் செய்தவர். இவரை இயக்குனர் இமயம் பாரதிராஜா தன்னுடைய நாடோடி தென்றல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

அந்தப் படத்தின் கதாநாயகன் நவரச நாயகன் கார்த்திக் தான். இந்த படத்தில் வாத்து மேய்க்கக்கூடிய பெண்ணாக ரஞ்சிதா நடித்தார். இந்தப் படத்தில் கார்த்திக்- ரஞ்சிதா ஜோடி இடையே கெமிஸ்ட்ரி பக்கவாக ஒர்க் ஆனது. இதனால் ரஞ்சிதாவிற்கு கார்த்திக்கின் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலித்திருக்கிறார். அந்த சமயத்தில் கார்த்திக் டாப் நடிகர் என்பதால் அறிமுக நடிகையான ரஞ்சிதாவை பெருசா ஒன்னும் கண்டுக்கல. ஆனா சாமியாருக்கு முன்பே நவரச நாயகனுக்கு கருப்பழகி துண்டு போட்டு இருக்கிறார், ஆனா கார்த்திக் தான் அதுக்கு மசியல.

Also Read: சினிமா டூ அரசியல்.. கலக்கிய, கலங்கிய 12 பிரபலங்கள்