28 வயது இளம் இயக்குனரை திருமணம் செய்து கொள்ளப்போகும், 39 வயது பிரபல நடிகை! என்னா காலக்கூத்து..

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் உடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் இந்த பிரபல நடிகை. அவருக்கு இந்தப் படம் பெரிய அளவில் பெயரை பெற்றுத் தரவில்லை என்றாலும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருந்தார்.

அதிலும் குறிப்பாக பிரம்மாண்ட திரைப்படத்தில் இளவரசியாக வேடம் அணிவது இவருக்குத்தான் கச்சிதமாக இருக்கும். இத்தகைய பெருமைக்குரிய இஞ்சி இடுப்பழகி ஒரே ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றி அதன் பிறகு உடல் எடையை குறைப்பதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரால் உடல் எடையை குறைக்க முடியாததால் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்ற முடிவில் திருமணத்திற்கு தயாராகி விட்டார். முதலில் இவர் தெலுங்கு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவியது. ஆனால் அதை, அந்த பிரபல நடிகையும் மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் கிரிக்கெட் வீரர் மற்றும் இவர் நடித்த பிரமாண்ட படத்தின் கதாநாயகன், வில்லன் உள்ளிட்டோருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இவர் திருமணத்தைக் குறித்து வெளியான அத்தனை தகவல்களும் பொய்யானவை என மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் இயக்குனர் ஒருவரை இந்த நடிகை காதலித்து கொண்டிருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதற்கு அந்த பிரபல நடிகை எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இவர்கள் வரும் 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த இளம் இயக்குனருக்கு வயது இருபத்தி எட்டு தான். ஆனால் இந்தப் பிரபல நடிகைகோ வயது முப்பத்தி ஒன்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்