37 வயது ஹாலிவுட் ஆக்டர் ஜானி வாக்டர் சுட்டுக்கொலை.. திருட்டை தட்டி கேட்டதால் ஏற்பட்ட பரிதாபம்

Hollywood Actor Johny Wactor Dies: எங்க என்ன நடந்தாலும் எனக்கு என்ன என்று வாயை மூடிக்கிட்டு இருந்தால்தான் உயிர் பிழைக்க முடியும் போல. பாவம் 37 வயதில் ஹாலிவுட் ஆக்டர் ஜானி வாக்டர்க்கு நடந்த பரிதாபம் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா என்ற பகுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜானி வாக்டர் வசித்து வந்திருக்கிறார். Johny Wactor நடிப்பில் வெளிவந்து முக்கியமான படங்கள்,

USS Indianapolis: Men of Courage (2016)
Criminal Minds (2018)
Barbee Rehab (2020)
The Pass (2023)

இவர் ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற படத்தில் நடித்ததின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து சைப்ரியா, கிரிமினல் மைண்ட் போன்ற படங்களிலும் நடித்து ஹாலிவுட் பக்கத்தில் இவருடைய நடிப்பை திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில் நேற்று இவருடைய வீட்டில் நண்பர்களுடன் இருந்த சமயத்தில் அங்கே மூன்று பேர் கும்பல் நுழைந்து இருக்கிறார்கள்.

தப்பை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட பரிதாபம்

அப்பொழுது ஜானி வாக்டர் காரில் இருந்த கடாலிக் (Catalytic converter) கன்வெர்ட்டர் பொருள்களை திருட முயற்சித்து இருக்கிறார்கள். இதனை கவனித்த ஜானி வாக்கர் அவர்களை கண்டித்து இருக்கிறார்.

இதனால் கொள்ளை கும்பல் தப்பிப்பதற்காக கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஜானி வாக்டரை சுட்டு அங்கிருந்து தப்பித்து இருக்கிறார்கள். பிறகு இவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.

ஆனால் அங்கு இவருடைய மரணம் உறுதியான நிலையில் அப்பகுதியில் இது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அந்த மூவர் கும்பலுக்கு வலை வீசி தேடி வருகிறார்கள்.

- Advertisement -