வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நித்யா மேனனின் மொத்த சொத்தின் மதிப்பு.. 35 வயதில் பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கும் தாய்க்கிழவி

10 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை நித்யா மேனன், 35 வயதில் அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக அறிமுகமான நித்யா மேனன் தமிழில் சித்தார்த்தின் 108 படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு தென்னிந்தியாவின் டாப் நடிகையாக மாறிய நித்யா மேனன் கொழுக்கு முழுக்குனு இருந்தாலும் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக ஏகப்பட்ட படங்களில் நடித்து ரவுண்டு கட்டினார். அதிலும் குறிப்பாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’, ராகவா லாரன்ஸ் உடன் ‘காஞ்சனா 2’. தளபதி விஜய் உடன் ‘மெர்சல் ‘என நல்ல நல்ல கதைகளில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து தமிழில் கலக்கிக் கொண்டிருந்தார்.

Also Read: மணிரத்னம் இயக்கத்தில் தோல்வியடைந்த 5 படங்கள்.. யானைக்கும் அடி சறுக்கும் என நிரூபித்த படம்

மேலும் கடந்த ஆண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடியது. இதில் தாய் கிழவி என்று கிண்டல் செய்யப்பட்டாலும் கடைசியாக தேன்மொழி, பூங்கொடின்னு தனுசே உருகி பாடுவார். இப்படி ஒரு தோழி நமக்கும் கிடைக்காத என இளைஞர்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பொறாமை பட்டனர்.

அந்த அளவிற்கு தன்னுடைய எதார்த்தமான நடிப்பை நித்யா மேனன் வெளிக்காட்டி இருப்பார். தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் நித்யா மேனன் ஒரு படத்திற்கு மட்டும் 3 கோடி சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமல்ல வெப்  சீரிஸ்கள், விளம்பரங்கள் என மாதத்திற்கு 25 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார்.

Also Read: ஹாலிவூடிலும் கலக்கிய 10 தமிழ் நடிகர்கள்.. ஹீரோவாக கால் பதித்த நடிப்பு அசுரன் தனுஷ்

தற்போது 35 வயதில் நித்யா மேனன் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 20 கோடி. இவரிடம் விலை உயர்ந்த BMW X1 M Sport மற்றும் Audi Q5 போன்ற கார்கள் உள்ளன. மேலும் தென்னிந்தியாவில் பல இடங்களில் நிலங்களை வாங்கி இன்வெஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். இவருக்கு ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பெங்களூர் மற்றும் கேரளாவிலும் பெரிய வீடு தனித்தனியாக உள்ளது. இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நித்யா மேனன், தன்னுடைய படங்களில் ஓவர் கவர்ச்சி இல்லாமல் நடிக்க கூடியவர். அது மட்டுமல்ல யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய உடல் எடையை குறைக்காமல் குண்டு குண்டுன்னு இருந்தாலும் அழகு தான் என்பதை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

Also Read: முரட்டு வில்லனாக 5 குடும்பப் படங்களில் கலக்கிய பிரகாஷ்ராஜ்.. எல்லாமே சூப்பர் ஹிட்டுனா எப்படி ப்ரோ

- Advertisement -

Trending News