30 வருடங்களாக பார்ட் 2 எடுக்காமல் கிடக்கும் 9 படங்கள்.. அந்தப்படம் மட்டும் வேண்டாம் என புறக்கணித்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதை ஒரு சில இயக்குனர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் தங்களது வெற்றி படத்தை பார்ட் 2 எடுக்காமல் இருந்து வருகின்றனர், அப்படி 30 வருடங்களாக பார்ட் 2 எடுக்காமல் இருக்கும் படத்தினை பற்றி பார்ப்போம்.

ஊமை விழிகள்: விஜயகாந்த், விசு மற்றும் சந்திரசேகர் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ஊமை விழிகள். இப்படம் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அப்பாவை தான் வில்லனாக காட்டி படத்தை முடித்து இருப்பார்கள்.

oomai vizhigal
oomai vizhigal

ஆனால் இப்படம் வெளிவந்த காலத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என பல ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வரை இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாபா:  ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் அவருக்கு பிடித்த படமாக இருப்பது பாபா திரைப்படம். அநியாயங்களை பார்த்து கோபப் படக் கூடிய ஒரு சாதாரண மனிதனாக நடித்திருப்பார். அதிலும் படம் முழுவதுமாக கத்தியும் தலை காப்புமாக நடித்திருப்பார் .இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவில்லை.

baba
baba

அசுரன்: அசுரன் திரைப்படம் ஒரு ஏலியன் சம்பந்தப்பட்ட திரைப்படம். இப்படத்தில் அருண்பாண்டியன், ரோஜா மற்றும் ராதாரவி போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியான பிரடிக்டர் படத்தின் டப்பிங் படமாகும். இப்படத்தில் கடைசியாக ஏலியன் வருவது போல் படத்தை முடித்து இருப்பார்கள். இப்படம் அன்றைய காலத்தில் வெற்றிகரமாக ஓடியது. ஆனால் தற்போது வரை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நியன்: ஷங்கர் மற்றும் விக்ரம் வாழ்க்கையில் முக்கிய படமாக இருப்பது அந்நியன் திரைப்படம். ஏனென்றால் இப்படத்தின் மூலம்தான் விக்ரமிற்கு நடிப்பிற்கான பேரும், ஷங்கருக்கு இயக்குனருக்கான புகழும் கிடைத்தது. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

anniyan shanker
anniyan shanker

ஆழ்வார்: அஜித் குமார் வாழ்க்கையிலேயே பல தோல்வி படங்கள் இடம் பெற்றிருந்தாலும் அந்த வரிசையில் இடம்பிடித்துள்ள திரைப்படம் ஆழ்வார் திரைப்படம். இப்படம் ஒரு சில ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தாலும் பல ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

aalwar
aalwar

ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஒரு சில ரசிகர்கள் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாலும் பல ரசிகர்கள் இப்படம் வராமலேயே இருக்கலாம் என வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன்: ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் செல்வராகவன் மற்றும் கார்த்தியின் திறமையை தமிழ்சினிமாவில் எடுத்துக்காட்டியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசித்த ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதற்கு விடிவு காலமாக தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சூது கவ்வும்: விஜய் சேதுபதி வாழ்க்கையை திருப்பிப் போட்ட திரைப்படம் சூது கவ்வும். இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து ரசிக்காத ரசிகர்களே கிடையாது. இப்படத்தின் இரண்டாம் பாகம் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது வரை எடுப்பதாக இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மவர். கமல்ஹாசன் நடிப்பில் சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நம்மவர். இப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்து தேசிய விருது வாங்கியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனுடைய இரண்டாம் பாகம் வெளியாகும் என அப்போது பரவலாக பேசப்பட்டது. ஆனால் தற்போது வரை இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இப்படத்தைப் போலவே இருப்பதாக பல ரசிகர்களும் கூறியது குறிப்பிடத்தக்கது.

master-nammavar-comparision
master-nammavar-comparision

அன்பானவன் அடங்காதவன் அசராதவன். அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் டைட்டிலை பார்த்ததும் சிம்பு ரசிகர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வேண்டும் என ஆசையாக இருந்தனர். ஆனால் இப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படிப்பட்ட படத்தை இரண்டாம் பாகம் மட்டும் தயவு செய்து எடுக்க வேண்டாம் என ஆதிக் ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்தனர்.

Anbanavan Asaradhavan Adangadhavan
Anbanavan Asaradhavan Adangadhavan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்