3 ஆண்டுகள், 21 படங்கள்.. 19 வயதில் முடிந்து போன நடிகையின் வாழ்க்கை

குறுகிய காலகட்டத்தில் முன்னேறிய எத்தனையோ நடிகைகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 16 வயதில் நடிக்க வந்த சிறு பெண் ஒருவர் 3 ஆண்டுகளில் 21 படங்கள் வரை நடித்து சாதனை புரிந்தது ஒட்டுமொத்த திரையுலகையுமே அந்த காலகட்டத்தில் வியப்பில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் இவர் நடிக்கிறார் என்று தெரிந்தாலே அப்படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்ற நிலையும் அப்போது இருந்தது. அந்த அளவுக்கு டாப் ஹீரோக்களையே மிரளவிடும் அளவுக்கு அழகிலும், தைரியத்திலும் வரம் வாங்கி வந்தவர் தான் அந்த நடிகை. இவருடைய வரவு அந்த கால கனவு கன்னிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் அளவுக்கு இருந்தது.

Also read: சைக்கோ இயக்குனரை வளைத்து போட்ட பால் கொழுக்கட்டை.. சம்பவ இடத்துக்கே சென்று பளார் விட்ட மனைவி

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த கனவுக்கன்னி 18 வயதிலேயே காதல் திருமணம் செய்து கொண்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு கூட அவர் நடிப்பதை நிறுத்தி விடவில்லை. அப்போதும் கூட அவருக்கான வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது.

இதுவே பல டாப் ஹீரோயின்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதனால் திரையுலகில் இவரை ஓரம் கட்ட வேண்டும் என பல நடிகைகளும் சபதம் எடுக்காத துறையாக சுற்றி திரிந்தனர். அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருந்த இந்த நடிகை 19 வயதிலேயே மரணம் அடைந்தது இன்று வரை திரைத்துறைக்கு பெரும் இழப்பாக இருக்கிறது.

Also read: உன் போக்கு சரி இல்ல, நீ நடிச்சது போதும்.. திருமணமான பிறகு சுயரூபத்தைக் காட்டிய கணவன்

ஆம் தன்னுடைய அழகால் பலரையும் ஈர்த்த இந்த நிலா பெண் தன் வீட்டு பால்கனியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அந்த சமயத்தில் அவர் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இவருடைய மரணம் இன்று வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது. இப்போது பல ஹீரோயின்கள் வந்தாலும் இந்த அழகு நடிகையின் இடம் அப்படியே இருக்கிறது என அந்த கால ரசிகர்கள் வருத்தத்துடன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்