பொங்கல் பண்டிகைக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் 3 பெரிய தலைகள்.. சூரிக்கு இவ்வளவு துணிச்சலா!

சற்றும் எதிர்பாராத வகையில் வரும் பொங்கலுக்கு மூன்று பெரிய தலைகளின் படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றனர். அதிலும் இத்தனை வருடங்களாக காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட விடுதலை படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவரவேற்பை பெற்றது. இதனால் இரண்டாம் பாகத்தை, பொங்கல் பண்டிகைக்கு பெரிய தலைகள் ரிலீஸ் ஆகும் படங்களோடு நேருக்கு நேராக மோதிக்கொள்ள போகிறது. இதனால் ‘சூரிக்கு இவ்வளவு துணிச்சலா!’ என பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

Also Read: யாருமே அறியாத சூரியின் முதல் 5 படங்கள்.. உண்மையான உழைப்பால் உயர்ந்த முருகேசன்

ஏனென்றால் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆப்பிரிக்கா, தைவான் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்தியன் 2 வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. அதேபோல் 10 மொழிகளில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகிறது.

பிரம்மாண்டமாக 3டி எஃபெக்டில் உருவாகி வரும் கங்குவா படத்தின் மூலம் இன்னொரு உலகத்தையே சிறுத்தை சிவா ரசிகர்களுக்கு காட்டப் போகிறார். இவ்வாறு கமலஹாசனின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் கங்குவா போன்ற இரண்டு பவர்ஃபுல்லான படங்களுடன் சூரியின் விடுதலை 2 படமும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டு இருக்கின்றனர்.

Also Read: ஆப்பிரிக்காவில் மெர்சல் பண்ணும் ஷங்கர்.. தயாரிப்பாளர் காசுக்கு கேரண்டி கிடைக்குமா?

அது மட்டுமல்ல விடுதலை 2 படத்தை விஜய்யின் லியோ படத்துடனும் வெளியிட வாய்ப்பு இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் லியோ வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆன ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகிறது. அன்றைய தினத்தில் விஜய்யுடன் சூரி நேருக்கு நேராக மோதவும் வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு விடுதலை படத்தின் முதல் பாகம் கொடுத்த வெற்றியின் துணிச்சல்தான் சூரியை பெரிய தலைகளுடன் மோத தைரியம் கொடுத்திருக்கிறது. இதனால் விடுதலை 2 லியோவுடன் மோதுகிறதா அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இந்தியன் 2 மற்றும் கங்குவா படத்துடன் மோதுகிறதா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.

Also Read: ‘கங்குவா’ என்னன்னு தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த சுடச்சுட அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்