இமேஜ் பார்க்காமல் இணையும் 3 சூப்பர் ஸ்டார்கள்.. ஜெயிலர் வில்லனுக்காக ஓகே சொன்ன ரஜினி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்களில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

மேலும் இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அத்துடன் இப்படத்தில் இவருக்கு இணையாக வில்லன் கேரக்டரில் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இவர் தமிழில் என்ட்ரி கொடுக்கும் முதல் திரைப்படம். இதில் நடிப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் ரஜினி. இவருக்காக மட்டும் தான் சிவராஜ் குமார் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார்.

Also read: 90-களில் ரஜினிக்கு பயத்தை காட்டிய 2 நடிகர்களின் சம்பளம்.. ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்ல

அதே மாதிரி கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிக்க இருக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோல் கேரக்டரில் இணையப் போகிறார். அதாவது தமிழில் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் இவர்கள் மூவரும் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கக்கூடியவர்கள்.

அப்படிப்பட்ட இவர்கள் மூன்று பேரும் இமேஜ் பார்க்காமல் ஒன்றாக ஒரே படத்தில் களம் இறங்க இருக்கிறார்கள். இந்தப் படத்தை கன்னட இயக்குனர் இவர்களை வைத்து இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also read: தன்னுடைய பெருமை பாட பல லட்சம் சம்பளம் வாங்கிய கண்ணழகி.. மீனாவை வைத்து ரஜினிக்கு வீசிய வலை

இப்படத்தின் முதல் பாகத்தில் மெயின் கேரக்டரில் சிவராஜ் குமார் நடிப்பதாகவும், சிறப்பு தோற்றத்தில் பாலகிருஷ்ணா நடிக்க வைப்பதாகவும் இயக்குனர் முடிவெடுத்து இருக்கிறார். அடுத்ததாக இதனுடைய இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது இந்த செய்திகள் தான் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களை பார்ப்பதற்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: தேடி போய் கால்ஷீட் கொடுத்தும் தட்டி கழித்த பிரபல நிறுவனம்.. ரஜினி விரித்த வலையில் சிக்கிய முன்னாள் மருமகன்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்